கடந்த வருடம் க.பொ.த உயர்தரம் எழுதி பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியுள்ள வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலை மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை (7) பாடசாலையின் அதிபர் ஏ.எம்.எம்.தாஹிர் தலைமையில் நடைபெற்றது.
பாடசாலையின் வரலாற்றில் முதல் முறையாக ஒரே தடவையில் 26 மாணவர்கள் கணித, விஞ்ஞான, வர்த்தக, தொழிநுட்ப மற்றும் கலைத்துறைகளில் பல்கலைக்கழக அனுமதி பெற்று பாடசாலைக்கும் பிரதேசத்திற்கும் பெருமை சேர்த்துக் கொடுத்த மாணவர்களை பேன்ட் வாத்தியத்தோடு ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு கெளரவிக்கப்பட்டனர்.
அத்தோடு குறித்த மாணவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்களுக்கு அதிதிகள் நினைவுப் பரிசில்களை வழங்கி கெளரவித்தனர்.
இந்நிகழ்வுக்கு அதிதிகளாக மட்டக்களப்பு மத்தி கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான வீ.ரீ.அஜ்மீர், எம்.ஜே.எம்.றிப்கா, ஓட்டமாவடி கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.ஐ.அஹ்சாப் மற்றும் பிரதேச பாடசாலைகளின் அதிபர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.