கொட்டகலை மானா காட்டுப்பகுதியில் பாரிய தீ பல ஏக்கர்கள் எரிந்து நாசம்.

ஹட்டன் கே.சுந்தரலிங்கம்-

திம்புல்ல பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தொண்டமான் தொழிநுட்ப பயிற்சி நிலையத்திற்கு சமீபமாக உள்ள மானா என்று அழைக்கப்படும். காட்டுப்பகுதியில் பாரிய தீ காரணமாக பல ஏக்கர்கள் எரிந்து நாநமாகியுள்ளன.

குறித்த தீ (19) திகதி அன்று பிற்பகல் 1.00 அளவில் ஏற்பட்டுள்ளது.
இந்த தீ பரவல் குறித்து பத்தனை பொலிஸாருக்கும் .ஹட்டன் டிக்கோயா நகரசபைக்கு அறிவிக்கப்பட்டதனையடுத்து.அவர்கள் தீயினை
கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.

தற்போது மலையகப்பகுதியில் நிலவி வரும் வரட்சியான காலநிலை காரணமாக தீ வேகமாக பரவிவருகிறது.
இதனால் தீயினை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வருவதற்கு ஹட்டன் டிக்கோயா நகரசபையின் தீயணைப்பு பாரிய பிரயத்தனங்களை மேற்கொண்டனர்.

இப்பகுதியில் ஏற்பட்டு தீ காரணமாக இந்த பகுதியில் காணப்படும் சிறிய வகை உயிரினங்கள்,தாவரங்கள் ,மூலிகைச் செடிகள்,அழிந்து போகும் அபாயத்தினை எதிர்நோக்கியுள்ளன.
அத்தோடு தீ பரவல் காரணமாக நீருற்றுகள் அற்றுப்போகும் நிலை காணப்படுவதனால் எதிர்க்காலத்தில் இப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படவும் வாய்ப்பு காணப்படுவதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர்..

குறித்த காட்டுப்பகுதிக்கு விசமிகளால் தீ வைக்கப்ட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.

அண்மை காலமாக மலையகத்தில் வளமான காட்டுப்பகுதிகளுக்கு தீ வைக்கப்படுவதனால் எதிர்காலத்தில் பாரிய சூழல் சீர்கேடுகள் ஏற்பட வாய்ப்பிருப்பதனாலும்,குடிநீர் மற்றும் வன விலங்கு அழிந்து போவதனாலும் இது குறித்து உரிய அதிகாரிகள் காடுகளை பாதுகாக்க சரியான திட்டம் ஒன்றினை முன் வைக்க வேண்டும் பொது மக்கள் கோரிக்கை விடுகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -