அந்தக் கடமையைச் செய்ய முற்படுவோரை அதிகாரப் போக்கில் தடுத்த நிறுத்த நினைப்பது ஏற்றுக்கொள்ளமுடியாத அரசியல் கலாசாரம் ஆகுமென கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் ஸ்ரீல.முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான ஹாபிஸ் நஸிர் அஹமட் தெரிவித்தார்.
இவ்விடயம் குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது:-
இந்த நாட்டில் நீண்டகாலமாகச் சிறுபான்மை இனங்கள் தமக்கான அதிகார பரவா க்கல் குறித்து குரல் எழுப்பி வருகின்றன. இதற்கான தீர்வை எட்டி இப் பிரச்சினை க்கு நிரந்தர தீர்வை பெற்றுக்கொள்வேண்டும் என்பது அவற்றின் எதிர்பார்ப்பாக இரு க்கிறது. இந்நிலையில், அரசியல் தீர்வுகள் குறித்து எமக்கு அழுத்தம் கொடுக்க முடியாது என அரசின் பிரதிநிதியான அமைச்சர் தெரிவித்திருப்பது ஏற்றுக்கொள்ள முடியாத கருத்தாகும்.
எந்தச் சமூகம் தனது பிரச்சினையை ஆளும் தரப்பிடமே முன் வைக்க முடியும். அதனை சரிவர அறிந்து அவற்றிக்குத் தீர்வுதரவேண்டியது ஆட்சியில் இருக்கும் அரசின் பொறுப்பாகும். அதனை விடுத்து அழுத்தம் கொடுக்கக்கூடாது கோரிக்கை வைக்கக்கூடாது எனத் தெரிவிப்பது ஆணவத்தின் வெளிப்படாகும். இதனை ஜனநா யக ரீதியாக நாம் ஏற்றுக்கொள்ள முடியாது.
'இந்த நாட்டிலுள்ள அனைத்து சமூகங்களும் நான் ஜனாதிபதி, எனவே அனைவ ரும் என்னுடன் இணைந்து செயற்பட முன்வாருங்கள் என ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ அவரது பதவிஏற்பு தொடக்கம் நடந்த முடிந்த சுதந்திரதின உரை முதல் அழைப்பு விடுத்து வருகின்;றார். அவரது நல் எண்ணத்தை சிறுபான்மை சமூகங்கள் பெரிதும் வரவேற்றுள்ளன.
இந்நிலையில் அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் சிலர் இனங்க ளுக்கிடையிலான புரிந்துணர்வையும் நல்லிணக்கத்தையும் குலைக்கும் வகையில் கருத்துக்களை முன்வைத்து வருவது பெரும் கவலையை அளிக்கிறது.
எனவே, இத்தகைய கருத்து பகிர்வுகளைத் தவிர்த்து அனைத்து இன மக்களும் ஒன்றுபட்டு செயற்படும் எண்ணவோட்டங்களை விதைத்து இந்த நாடு ஜனநாய கத்தின் அடையாளமாக உலக அரங்கில் வலம்வர ஆவன செய்யவேண்டும்- என்றார்.