வருமானம் குறைந்தவர்களுக்கு தொழில் வாய்ப்பை வழங்கும் வேலைத் திட்டத்திற்கான நேர்முகப்பரீட்சை

எஸ்.எம்.எம்.முர்ஷித்-

ல்நோக்கு அபிவிருத்திச் செயலணியின் ஊடாக வருமானம் குறைந்தவர்களுக்கு தொழில் வாய்ப்பை வழங்கும் வேலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான நேர்முகப்பரீட்சை இன்று புதன்கிழமை தொடக்கம் நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வருகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பதினான்கு பிரதேச செயங்களில் 26.02.2020 இன்று புதன்கிழமை தொடக்கம் 29.02.2020 சனிக்கிழமை வரை நேர்முகப் பரீட்சை இடம்பெறவுள்ளதும்.

அந்தவகையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடாத் தொகுதியில் ஓட்டமாவடி பிரதேச செயலாளர், வாழைச்சேனை பிரதேச செயலாளர், கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர், வாகரைப் பிரதேச செயலாளர், கிரான் பிரதேச செயலாளர், செங்கலடி பிரதேச செயலாளர் ஆகிய பிரிவுகளில் நேர்முகப் பரீட்சைக்கு பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டு வருகின்றனர்.

குறித்த நேர்முகப் பரீட்சையில் நடத்துனர்களாக பிரதேச செயலக உயர் அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள், இராணுவத்தினர், மாவட்ட செயலக உயர் அதிகாரிகள் ஆகியோர்கள் கலந்து கொண்டுள்ளனர்.\
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -