உயர் கல்வி நிறுவனங்களில் பட்டப்படிப்பை மேற்கொள்ள கடன் வசதி

ஐ. ஏ. காதிர் கான்-

ரசு அல்லாத உயர் கல்வி நிறுவனங்களில் பட்டப்படிப்பு கல்வி நெறியைத் தொடர்வதற்கும், வட்டி அற்ற கடனைப் பெற்றுக் கொள்வதற்குமான விண்ணப்பங்கள் தற்பொழுது ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. 

2016, 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றி, அரசாங்கப் பல்கலைக்கழகங்களில் அனுமதியைப் பெற்றுக் கொள்வதற்கான தகுதியைப் பெறாத மாணவர்கள் இதற்காக விண்ணப்பிக்க முடியும்.

உயர்தரப் பரீட்சையில் ஆகக் குறைந்தது 3 பாடங்களில் சித்தி பெற்ற மாணவர்கள், உயர் கல்வி அமைச்சின் இணையத்தளத்தின் ஊடாக மார்ச் 23 ஆம் திகதி வரையில் இதற்காக விண்ணப்பிக்க முடியும்.

8 இலட்சம் ரூபா வரையில் இதற்கான கடனைப் பெற்றுக் கொள்ள முடியும். 3 தொடக்கம் 4 வருடங்களில் இந்தக் கடனைத் திருப்பிச் செலுத்த முடியும். இது தொடர்பிலான மேலதிக விபரங்களை, "சுபஹ மாணவர்களுக்கான புலமைப்பரிசில் வேலைத்திட்டம் - 2019 - 2021",
http://www.moe.gov.lk/tamil/index.php option=com_content&view=category&id=435&Itemid=1167
என்ற இணையத்தளத்தின் ஊடாக அறிந்து கொள்ள முடியும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -