வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் முன்னைய அரசாங்கத்தின் ஆட்சியில் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சா் சஜித் பிரேமதாசாவின் செமட்ட செவன வீடமைப்புக் கிராமங்களை நிர்மாணிக்கவென தனியாா் காணிகள் கொள்முதல் செய்வதற்கு அனுமதி அளிக்க்பபட்டடிருந்தன. . இக் காணி்கள் கொடுக்கல் வாங்கள் நடவடிக்கையில் பாரிய ஊழல் மேசடிகள் இடம்பெற்றிருந்தமை தெரியவந்துள்ளதாக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவா் ரேனுகா பெரோ ஊடகங்களுக்கு தெரிவித்தாா்.
அம்பாந்தோட்டை மாவட்டத்தில் தனியாா் காணிக்ள கொள்முதல் செய்யும்போது அம்பாந்தோட்டை மாவட்டக் அலுவலகத்தில் கடமையாற்றிய அதிகாரிகள் இனைந்து 500 மில்லியன் ருபாவை நிதிமோசடிகள் செய்துள்ளனா். இவ் விடயம் சம்பந்தமாக பொதுமக்கள் மற்றும் காணிச் உரிமையாளா்கள் வீடமைப்பு அதிகார சபையின் தலைமைக் காரியாலயத்தின் கணக்காய்வு பிரிவினருக்கு முறையிட்டதையடுத்து இவ் விடயம் உரிய பரிசீலனைகள மேற்கொள்ளப்பட்டடன. அதில் 500 மில்லியன் ருபாவுக்கு அதிகமான தொகை கையாடப்பட்டுள்ளதாக கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இவ் விடயம் சம்பந்தமாக தேசிய வீடமைப்பு அம்பாந்தோட்டை மாவட்டக் அலுவலகத்தின் முகாமையாளா் , கணக்காளா், உதவிக் கணக்காளா் உட்பட 11 அதிகாரிகள் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளனா். மேற்படி விடயமாக பொலிஸில் முறைப்பாடு செய்ப்பட்டதையடுத்து சி.ஜ.டி யினா் விசாரனைகள் மேற்கொண்டு 11 அதிகாரிகளையும் பொலிசாாினால் கைது செய்து மேலதிக விசாரனைகளையும் மேற்கொண்டு வருகின்றனா்.
