சிறந்த ஒரு ஜனாதிபதியை நீண்ட நாட்களுக்கு பின்னர் பெற்றிருக்கிறோம் -ஜனாதிபதி சட்டத்தரணி எம்.யூ.எம். அலி சப்ரி


பாறுக் ஷிஹான்-
சிறந்த ஒரு ஜனாதிபதியை நீண்ட நாட்களுக்கு பின்னர் பெற்றிருக்கிறோம். இந்த ஜனாதிபதி சொல்வதை செய்யக் கூடிய தைரியமான ஆளுமை மிக்கவர். எனவே தேர்தல் காலங்களில் மக்களிடம் பொய்யான பிரச்சாரங்களை செய்தவர்கள் கண்ணாடி முன்னர் நின்று சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என ஜனாதிபதி சட்டத்தரணி எம்.யூ.எம். அலி சப்ரி தெரிவித்தார்.

புதிய அரசின் வகிபாகமும்,பல் இன மக்கள் வாழும் இலங்கையில் முஸ்லீம்களின் எதிர் காலமும் எனும் தொனிப்பொருளில் கல்முனை முகையதீன் ஜும்மா பள்ளிவாசல் முன்றலில் வெள்ளிக்கிழமை (31) இரவு பொதுக்கூட்டம் முன்னாள் கல்முனை மாநகரசபை உறுப்பினர் வெஸ்டர் ஏ.எம். ரியாஸ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பிரதம அதிதியாக கலந்து கலந்துகொண்டு மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் தனது கருத்தில்

இந்த நாட்டில் முஸ்லீம்களுக்கென தீவிரவாத இயக்கம் எதுவும் இருக்கவில்லை. முஸ்லிங்கள் தீவிரவாத கொள்கைகளை எப்போதுமே ஆதரித்ததுமில்லை. ஆனால் ஒருவர் செய்த செயலினால் சகல முஸ்லிங்களுக்கும் தலைகுனிவாக நிகழ்வாக அந்த சம்பவம் அமைந்தது. அந்த சம்பவத்தில் கைதுசெய்யப்பட்ட அப்பாவிகளை சட்டத்தரணியாக இருந்த நாங்கள் ஒரு குழுவாக இணைந்து போராடி விடுதலை செய்துள்ளோம்.எமது நாடு முன்னேற வேண்டுமாயின் பாதுகாப்பு அவசியம். மக்கள் நிம்மதியாகவும் சந்தோசமாகவும் வாழ பாதுகாப்பு அவசியம் அந்த பாதுகாப்பை உறுதி செய்யக் கூடியவர் எமது ஜனாதிபதி என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.நாங்கள் அரசியல் செய்வது எங்கள் பக்கற்றுக்களை நிரப்புவதற்காக அல்ல .இலங்கையில் உள்ள அனைத்து இன மக்கள் ஒற்றுமையாக வாழ வழி வகுப்பது எமது நோக்கமாகும் அன்று மலேசியாவை மகாதிர்முகம்மது ,சிங்கப்பூரை லீ குவான் யூ ,தென் ஆபிரிக்காவை ஜெனரல் பார்க் ,போன்ற தலைவர்கள் எவ்வாறு தனது நாட்டை சிறந்த முறையில் கட்டியெழுப்பினார்களோ அதே போன்ற தலைவர் தான் கோடடாபய ராஜபக்ஷ என்பதை நான் கூறிக்கொள்ள விரும்புகிறேன். இதற்காக நாம் ஜாதி பேதங்களை மறந்து நாம் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் .

இலங்கையில் வாழும் முஸ்லிம்கள் அனைவரும் சகல சந்தர்ப்பத்திலும் தாய் நாட்டின் நலன் கருதியே செயற்பட்டு வந்துள்ளனர். அதேபோன்று சகல இன மக்களுடனும் ஐக்கியத்துடன் வாழும் சூழலை சீர்குலைக்க சில தீய சக்திகள் முயற்சித்து வருகின்றனர். இதனை ஒரு போதும் நாங்கள் அனுமதிக்க முடியாது. இந்த நாட்டில் வாழும் சகல இனங்களுடனும் ஒற்றுமையாகவும், சகவாழ்வுடனுமே வாழ முஸ்லிம்கள் விரும்புகின்றனர்.

நீண்ட நாட்களுக்கு பின்னர் சிறந்த ஒரு ஜனாதிபதியை பெற்றிருக்கிறோம். இந்த ஜனாதிபதி சொல்வதை
செய்யக் கூடிய தைரியமான ஆளுமை மிக்கவர். இந்த நாட்டை தலைசிறந்த நாடாக மாற்றும் திறமை கொண்டவர். தேர்தல் காலங்களில் மக்களிடம் பொய்யான பிரச்சாரங்களை செய்தவர்கள் கண்ணாடி முன்னர் நின்று சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.முஸ்லீம் மக்களின் தலைவர்களாக உள்ள இவர்கள் தற்போது டிலர்களாகவே அண்மைக்காலங்களாக வலம் வருவது வேதனையாக உள்ளது.முஸ்லிம்களாகிய நாங்கள் என்றும் தாய்நாட்டை ஆதரிப்பவர்கள், பிரிவினை வாதத்தை ஆதரிப்பவர்கள் அல்ல என்றாலும் சிலர் எம்மை இனவாதிகளாகவும் அடிப்படை வாதிகளாகவும் காண்பிக்க முயற்சிக்கின்றனர்.

கிழக்கில் முஸ்லிம்கள் 40வீதம் மட்டுமே வாழ்கிறார்கள் ஆனால் கிழக்கிற்கு வெளியே 60வீதம் முஸ்லிங்கள் வாழ்கிறார்கள் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. இந்த நாட்டில் வாழும் நாங்கள்பெரும்பான்மை சமூகத்துடன் சேர்ந்து இணைந்தே வாழ வேண்டும்.சிங்கள மக்களின் நகரம் கண்டி என்பது போன்று தமிழர்களின் நகரம் யாழ் போல கிறிஸ்தவர்களின் நகரம் நீர்கொழும்பு என்பது போல முஸ்லிம்களின் நகரம் கல்முனை தான்.மறைந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் மாபெரும் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களுக்கும் எனக்கும் இடையிலான உறவு 1994 இருந்து ஆரம்பமானதாகும். நானும் அவரும் சவூதியில் வைத்து இந்த நாட்டின் முஸ்லிங்களின் இருப்புப்பற்றி தீவிரமாக ஆராய்ந்துள்ளோம். அவரும் நானும் சட்டக்கல்லூரியில் மாணவ தலைவர்களாக இருந்த வரலாற்றை நினைவு கூறுகிறேன்.எனவே நாங்கள் எந்த சந்தர்ப்பத்திலும் பிரிவினை வாதத்தை ஆதரரிப்பவர்கள் அல்ல என்றாலும். பேரம் பேசி சமூகத்தின் நலன்களை பெற்றுக் கொள்வதில் பின்னிற்கப் போதில்லை என்றும் ஜனாதிபதி சட்டத்தரணி தெரிவித்தார்.

இந்நிகழவில் இலங்கை லொத்தர் சபையின் தலைவர் சட்டத்தரணி லலித் பியும் பெரேரா, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தவிசாளர் உவைஸ் முஹம்மட் ,உட்பட பல பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -