இன்ஸ்டாகிராமில் 20 கோடி பின்தொடர்பவர்களை கொண்டு கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ சாதனைப் படைத்துள்ளார்.
போர்த்துக்கலை சேர்ந்த கால்பந்து நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ உலகின் தலைசிறந்த வீரராக திகழ்ந்து வருகிறார். இவருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இவர் வெளியிடும் படங்கள் மற்றும் செய்திகளை படிக்க சமூக வலைத்தளங்களில் அவரை பின்தொடர்கிறார்கள்.
அந்த வகையில் இன்ஸ்டாகிராமில் அவரை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 20 கோடியை தாண்டியுள்ளது. இதன்மூலம் இன்ஸ்டாகிராமில் 20 கோடியை தாண்டிய முதல் நபர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
Hopper HQ என்ற இன்ஸ்டாகிராம் மார்க்கெட்டிங் நிறுவனத்தின் கணிப்பின் படி, போர்த்துக்கல் வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ இன்ஸ்டாகிராம் மூலம் வெளியிடும் விளம்பர அனுசரணை பதிவொன்றுக்கு €0.9 Million ( சுமார் 18 கோடி ரூபா ) சம்பாதிக்கிறார். இன்ஸ்டாகிராம் மூலமாக மட்டும் வருடத்துக்கு கிறிஸ்டியானோ ரொனால்டோ €48 Million ( சுமார் 960 கோடி ரூபா ) வருமானம் சம்பாதிக்கிறார்.
இந்த வருமானம் கிறிஸ்டியானோ ரொனால்டோ விளையாடும் கிளப்பான ஜூவாண்டஸ் ( Juventus ) அணியின் மூலம் வருடத்துக்கே பெறும் வருமானம் €34 Millionயாகும் ( சுமார் 680 கோடி ரூபா ) ஆனால் அதை விட அதிகமாக இன்ஸ்டாகிராம் மூலம் வருமானம் ஈட்டுகிறார்.
இன்ஸ்டாகிராம் மூலம் அதிக வருமானம் ஈட்டும் பிரபலங்கள் பட்டியலில் கிறிஸ்டியானோ ரொனால்டோவை தொடர்ந்து ஆர்ஜெண்டினாவின் கால்பந்து வீரர் லியோனல் மெஸ்சி €23.3 Millionயை ( சுமார் 466 கோடி ) சம்பாதித்து இன்ஸ்டாகிராமில் 2வது இடத்தில் உள்ளார்.
இன்ஸ்டாகிராமில் கிறிஸ்டியானோ ரொனால்டோவை தொடர்ந்து அதிகம் பின்தொடர்பவர்கள் பட்டியலில் அமெரிக்க பாடகி அரியானா கிராண்டி (Ariana Grande) 17 கோடியே 30 லட்சம் பேரும், அமெரிக்கா ஹொலிவுட் நடிகர் டுவெயின் ஜோன்சனை (Dwayne Johnson) 17 கோடியே 3 லட்சம் பேரும், அமெரிக்க பாடகி செலெனா கோமஸை (Selena Gomez) 16 கோடியே 70 லட்சம் பேரும், அமெரிக்க பிரபலம் கையில் ஜென்னர் ( kylie jenner ) 16 கோடி பேரும், அமெரிக்கா பிரபல நடிகை கிம் கர்தாஷியனை ( kim kardashian ) 15 கோடியே 80 லட்சம் பேரும், ஆர்ஜெண்டினாவின் லியோனல் மெஸ்சியை (Lionel Messi) 14 கோடியே 20லட்சம் பேரும் , அமெரிக்கா பாடகியும் நடிகையுமான பியான்ஸேக்கு (Beyoncé) 13 கோடியே 90 லட்சம் பேரும் ,பிரேசிலின் கால்பந்து
வீரர் நெய்மரை ( Neymar) 13 கோடியே 97 லட்சம் பேர் என அடுத்தடுத்த பின்தொடர்பவர் பட்டியலிலுள்ளார்.
கிறிஸ்டியானோ ரொனால்டோவின்
இன்ஸ்டாகிராம் பக்கம் இதோ https://www.instagram.com/cristiano