மலையக மக்களுக்கு என்னென்ன தேவை என்பதனை அறிந்து அதற்கேற்ப நிதியினை ஒதுக்கி சேவையினை மேற்கொள்பவர் முன்னாள் அமைச்சர் பழனி திகாம்பரம் என முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் சோ ஸ்ரீதரன் தெரிவித்தார்.
ரொத்தஸ் கிராமம்; புருட்ஹில் தோட்டம் ஆகிய இருவேறு பிரதேசங்களுக்கு செல்லும் பாதை மத்திய மாகாணசபை உறுப்பினர் சோ .ஸ்ரீதரன் அவர்களின் வேண்டுகோளுக்கமைய அமைச்சர் பழனி திகாம்பரம் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் சுமார் 40 லட்சம் ரூபா செலவில் புனரமைக்கப்பட்டுள்ளது.
இந்த பாதையினை மக்கள் பயன்பாட்டுக்கு கையளிக்கும் நிகழ்வு பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ் தலைமையில் நேற்று ( 01) நடைபெற்றது.அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில் .. மலையகத்தில் வாழும் இன்று பல பிரதேசங்களுக்கு முறையான வாகனங்கள் செல்லும அளவுக்கு வீதிகள் இல்லாததன் காரணமாக மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.இதனால் மக்கள் அன்றாட தேவைகள் பூர்த்தி செய்து கொள்ள முடியாது. பல்வேறு சிரமங்களுக்கு நாளாந்தம் முகம் கொடுத்து வருகின்றனர்.இந் நிலைமையினை தீர்க்க வேண்டும் என்றால் அவர்களின் அடிப்படை தேவைகளை உணர்ந்து அவற்றினை தீர்த்து வைக்க வேண்:டும.; அவ்வாறான ஒரு தேவையினை நிறைவேற்றும் பணியினை தான் தொழிலாளர் தேசிய சங்கத்திள் தலைவர் கௌரவ பழனி திகாம்பரம் செய்துவருகிறார்.
அதன் பயனாக இன்று ரொத்தஸ் மற்றும் புருட்ஹில் மக்கள் பெற்றுள்ளனர். இதன் விளைவாக இன்று இந்த பிரதேசம் துரித கதியில் அபிவிருத்தி காணவுள்ளது.இன்று இந்த பிரதேசங்களில் காணிகளின் விலைகள் அதிகரித்துள்ளன.அதனால் மக்களுக்கு பல்வேறு விதமான நன்மைகள் ஏற்படவுள்ளன.இதனை தொடர்ந்து பல வருடகாலமாக பாதை இன்றி, நடை பாதையினை பயன்படுத்தி வந்த குடாஓயா மக்களுக்கு வாகனங்கள் செல்லும் அளவுக்கு நாங்கள் குடாஓயா கிராம பாதையினை புனரமைத்து திறந்து வைக்கவுள்ளோம். இதன் மூலம் அங்கு 30000 ஆயிரம் ரூபாவுக்கு இருந்து ஒரு பேச்சஸ் காணியின் விலை 100000 ரூபா வரை அதிகரித்துள்ளதாக அங்கு வாழும் மக்கள் தெரிவிக்கின்றனர்.எனவே இன்று மக்களின் தேவை இதுவாக இருக்கும் போது அதனை அறிந்து சேவையாற்ற வேண்டும் என அவர் மேலும் கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்வுக்கு பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ,முன்னாள் மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சர் ராம் உட்பட தொழிலாளர் தேசிய சங்கத்தின் முக்கிய்ஸ்த்தர்கள் கலந்து கொண்டனர்.