அரசாங்க ஊழியர்களின் சம்பள மற்றும் ஓய்வூதிய முரண்பாட்டையும் உடனே தீர்க்க வேண்டும்: JVPயின் தலைவர் அனுரகுமார


ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ்-
ரசாங்க ஊழியர்களின் சம்பள மற்றும் ஓய்வூதிய முரண்பாட்டை தீர்க்க புதிய அரசாங்கம் பின்வாங்குகின்றது.
இந்த பிரச்சினைக்கு தீர்வைக் காண பாராளுமன்றத்தில் குறைநிரப்பு பிரேரணையை சமர்பிக்குமாறும், அத்தோடு மக்களுக்கான நலன்கள் கிடைக்கப் பெறாமல் செய்வதற்கே இந்த அரசாங்கம் மூன்றில் இரண்டை எதிர்பார்க்கிறது என JVPயின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
பெலவத்தையில் அமைந்துள்ள JVPயின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் JVPயின் தலைவர் கருத்து தெரிவிக்கையில்:-
அரசாங்க ஊழியர்களின் ஓய்வூதியம் தொடர்பில் தற்போதைய அரசாங்கம் எதிர்க்கட்சியிலிருக்கும் போது பல பேராட்டத்தை முன்னெடுத்தது.
ஓய்வூதியம் தொடர்பில் பல யோசனையையும் முன்வைத்தது. எனினும் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் அவற்றை அரசாங்கம் புறந்தள்ளுகின்றது. அதாவது கடந்த 2016ம் ஆண்டு January 1ம் திகதி முதல் 2019ம் ஆண்டு December 31ம் திகதி வரையான காலத்தில் ஓய்வு பெற்றோருக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்தில் திருத்தம் எதையும் மேற்கொள்ளப்பட மாட்டாதென்றும், 2020 ஆண்டு January 1ம் திகதியிலிருந்து ஓய்வூதிய திருத்தத்தை அமுல்படுத்த இணக்கப்பாடு எட்டப்பட்டது.
கடந்த 2016ம் ஆண்டு February மாதம் 25ம் திகதி அரசாங்க சேவை அமைச்சால் வெளியிடப்பட்ட சுற்று நிரூபத்துக்கமைய இணக்கப்பாடு எட்டப்பட்டது.
அதற்கமைய குறித்த காலத்துக்கிடையில் ஓய்வு பெற்றவர்கள் ஓய்வுப்பத்திரத்தை வழங்கும் போது 2020 ஆண்டு January 1ம் திகதி முதல் திருத்தப்பட்ட ஓய்வுதியத்துக்கான ஆவணமும் இணைத்தே வழங்கப்படும்.
அதே போன்று புதிய அரசாங்கம் ஆட்சியை பொறுப்பேற்ற பின்னர் 2019 ஆண்டு December மாதம் 10ம் திகதி , 2016.01.01 & 2020.01.01 ஆகிய தினத்தின் பின்னர் ஓய்வு பெறும் அரசாங்க ஊழியர்களுக்கு சம்பள முரண்பாட்டை தீர்த்து வைக்க தீர்மானிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. நிதியமைச்சும் இதற்கு இணக்கம் தெரிவித்தது.
எனினும் அரசாங்கம் தற்போது அவ்வாறு செய்யவில்லை. இந்தவருடம் January மாதம் 1ம் திகதி வெளியிடப்பட்ட சுற்றறிக்கையின் படி ஓய்வூதியத்தை அதிகரிக்கும் விடயத்தை கைவிடுவதாகவும், புதிய அரச கொள்கையின் படி பட்ஜெட் திட்டத்துக்கு அமைய அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமென்று கூறுகிறது.
இதன் மூலம் 2016க்கு பின்னர் ஓய்வு பெற்றவர்களுக்கான ஓய்வூதிய அதிகரிப்பு தொகை ரத்து செய்யப்படுவதோடு, இவ்வருடத்தில் ஓய்வு பெறுவர்களுக்கும் அந்த உரிமை இல்லாமல் ஆகிறது.
இது தொடர்பாக நான் பாரளுமன்றத்தில் கேள்வியெழுப்பிய போது இதற்காக நிதியொதுக்கவில்லை என கூறுகின்றனர். எனினும் நிதியமைச்சின் அனுமதியுடனேயே சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அரசாங்கத்தால் திட்டமில்லாத பொருளாதார கொள்கையால் அரசாங்க வேலையிலிருந்து ஓய்வு பெற்றவருக்கான ஓய்வூதியம் இல்லாமல் போகிறது.
இது போன்றே நிறைவேற்று தரத்திலான ஊழியர்களுக்கு 15,000 ரூபாய் விஷேட கொடுப்பனவை வழங்க கடந்த அரசாங்கம் சுற்றறிக்கையொன்றினை வெளியிட்டது. எனினும் இம் மாதம் 7ம் திகதி புதிய அரசாங்கம் அதனையும் ரத்து செய்துள்ளது.
அரசாங்க சேவையிலுள்ளோருக்கு தொடர்ந்தும் சம்பளப்பிரச்சினை காணப்படுகிறது. இதற்காக பல்வேறு போராட்டம் முன்னெடுக்கப்பட்ட போதிலும் தீர்வை பெற்றுக் கொள்ளப்படவில்லை.
இந்த முரண்பாடுகளைத் தீர்த்துக் கொள்வதற்காக தொழிற்சங்கங்களும் , அரசியல் கட்சிகளும் பல போராட்டங்களை முன்னெடுத்திருகின்றன.
அதனால் முன்னாள் ஜனாதிபதி சம்பள முரண்பாடு தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமித்தார். அந்த ஆணைக்குழுவால் அறிக்கையொன்றும் சமர்பிக்கப்பட்டது. அதற்கமைய ஒவ்வொரு அரசாங்க ஊழியருக்கும் குறிப்பட்ட காலத்தில் சமாந்தரமாக சம்பளம் அதிகரிக்க வேண்டுமென்ற யோசனை முன்வைக்கப்பட்டது. அதற்கமைய 2020ம் ஆண்டில் சம்பளத்தை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டது. எனினும் தற்போதைய அரசாங்கம் அதற்கேற்ப செயற்படவில்லை என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -