மலையக ஆலயங்களில் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கு நல்லாசி வேண்டி புத்தாண்டு பூஜைகள் சிறப்பாக நடைபெற்றன..

ஹட்டன் கே.சுந்தரலிங்கம்-
பிறந்துள்ள புத்தாண்டில் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் சாந்தி சமாதானம்,சகவாழ்வு ஏற்படவும் நாடு செழிப்புறவும் வேண்டி இன்று (01) அதிகாலை முதல் மலையகத்தில் உள்ள ஆலயங்களில் விசேட சிறப்பு பூஜைகள் அதிகாலை முதல் நடைபெற்று வருகின்றன.
ஹட்டன் பகுதியில் காணப்படும் பிரதான ஆலயங்களில் ஒன்றான ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தில் புத்தாண்டு சிறப்பு பூஜைகள் ஆலய பிரதம குரு பிரம்ம ஸ்ரீ சந்திராநந்த சர்மா அவர்களின் தலைமையில் நடைபெற்றன.
பிறந்துள்ள ஆங்கில புது வருடம் எல்லாம் வல்ல மாணிக்கப்பிள்ளையாரின் அருளால் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் சாந்தி சமாதானம் ஒற்றுமை ஆகியன வேண்டி சிறப்பு பூஜைகள் இடம்பெற்றதுடன் திருவெண்பாவையும் இடம்பெற்றன.
இதன் போது கலந்து கொண்ட பக்த அடியார்கள் அனைவருக்கும் விபூதி மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
அதனை தொடர்ந்து ஒருவருக்கு ஒருவர் புத்தாண்டு நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டனர்.
இந்த பூஜை வழிபாடுகளில் ஹட்டன் பிரதேசத்தினை சேர்ந்த பெருந் திரளான மக்கள் கலந்து கொண்டனர்.
புத்தாண்டு குறித்து கருத்து தெரிவித்த ஹட்டன் மாணிக்க பிள்ளையார் ஆலயத்தின் பிரதம குரு பிரம்ம ஸ்ரீ சந்திராநந்த குருக்கள் கருத்து தெரிவிக்கையில் ..
மலர்ந்துள்ள புத்தாண்டில் இந்து பௌத்த,கிறிஸத்வ,.இஸ்லாம் ஆகிய நான்கு சமயங்களை சேர்ந்த அனைத்து மக்களும் ஒற்றுமையாகவும் சாந்தி சமாதானமாகவும் வாழ்ந்து எல்லோருக்கும் எல்லவிதமான நன்மைகளும் கிடைக்க மாணிக்க பிள்ளையார் அருள்புரிய வேண்டும் என அவர் வேண்டிக் கொண்டார்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -