கவனிப்பாரற்றுக் கிடந்த வீதி புனரமைப்பு.

எச்.எம்.எம்.பர்ஸான்-
கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபைக்கு உட்பட்ட தியாவட்டவான் அரபா வித்தியாலய வீதிக்கு கொங்ரீட் இட்டு புனர்நிர்மாணம் செய்யப்பட்டுள்ளது.

குறித்த வீதி மிக நீண்டகாலமாக புனர்நிர்மாணம் செய்யப்படாமல் காணப்பட்டதால் மழைகாலத்தில் அவ் வீதியால் பயணிக்கும் பாடசாலை மாணவர்கள் மற்றும் பாதசாரிகள் பல்வேறு அசெளகரியங்களை எதிர்நோக்கி வந்தனர்.

இதனை புனர்நிர்மாணம் செய்து தரும்படி அப்பகுதியில் காணப்படுகின்ற அமைப்புக்கள், பொதுமக்கள் ஆகியோர் அப்பகுதி பிரதேச சபை உறுப்பினர் ஏ.ஜீ.அஸீஸுர் ரஹீம் ஆசிரியரிடம் கோரிக்கை விடுத்தனர்.

இக்கோரிக்கைக்கு அமைவாக பிரதேச சபை உறுப்பினர் அஸீஸுர் ரஹீம் அவர்களின் முயற்சியால் முன்னாள் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்களின் பதினைந்து இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் மூலம் குறித்த வீதி கொங்ரீட் இடப்பட்டு புனர்நிர்மாணம் செய்யப்பட்டுள்ளது.

மிக நீண்ட காலமாக கவனிப்பாரற்றுக் கிடந்த வீதியை புனர்நிர்மாணம் செய்தமைக்காக சனசமூக நிலைய தலைவர் நஜிமுதீன் மெளவி, கிராம அபிவிருத்தி சங்க தலைவர் எம்.ஐ.எம்.றிஸ்வான், தியாவட்டவான் காலித் இப்னு வலீத் ஜும்ஆ பள்ளிவாயல் தலைவர் கே.பெளஸ்தீன், மாதர் சங்க தலைவி கே.சமீமா உட்பட பிரதேச மக்கள் அனைவரும் பிரேதேச சபை உறுப்பினர் அஸீஸுர் ரஹீமுக்கு நன்றிகளை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -