தோட்டத்தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பளம் வழங்குவதற்காக எடுத்த நடவடிக்கை தொடர்பாக இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் பொதுச் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.சதாசிவம் நன்றி தெரிவித்துள்ளார்.
அவர் நேற்று (15) திகதி ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள ஊடக செய்தியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் அந்த செய்தியில் தொடர்ந்து தெரிவித்துள்ளதாவுது,கடந்த 02 ம் திகதி டெம்பல் டிரீஸ் ,இல் பிரதமருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது டிசம்பர் மாதம் முதல் தோட்டத்தொழிலாளர்களின் சமபளத்தினை உயர்த்தி தருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டதாகவும். அ க்கலந்துரையாடக்கமைய தோட்டத்தொழிலாளர்ளின் சம்பள விடயம் தொடர்பாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ அவர்கள் 19.12.2019 திகதி தனது செயலாளர் ஊடாக பெருந்தோட்ட அமைச்சர் கலாநிதி ரொசான் பத்திரன ஊடாக அமைச்சரவை அங்காரத்திற்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்.அந்த நடவடிக்கையினை தொடர்ந்து அமைச்சரவை அங்கிகாரம் கிடைத்துள்ளதாகவும் அதற்கு அதற்காக பிரதமருக்கு ஜனாதிபதிக்கும்,பெருந்தோட்ட அமைச்சருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும்,இதனை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுக்குமாறும் அவர் தொடர்ந்தும் கேட்டுக்கொண்டுள்ளார்.



