சாய்ந்தமருதில் அபிவிருத்திக்கான மய்யம்

அஸ்ஹர் இப்றாஹிம்-
சாய்ந்தமருது பிரதேசத்தில் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் மற்றும் அபிவிருத்திப்பணிகளை முன்னெடுத்துச் செல்லும் வகையில் சமூக மாற்றங்கள் மற்றும் அபிவிருத்திக்கான மய்யம் எனும் தொனிப்பொருளிலான நிலையமொன்று கடந்த ஞாயிற்றுக் கிழமை சாய்ந்தமருது கல்யாண வீதியில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கல்முனை மாநகரசபை சுயேட்சை குழு உறுப்பினரும் ஓய்வுபெற்ற நில அளவையாளருமான எம்.ஏ.றபீக் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபைத் தலைவர் அல்ஹாஜ் வை.எம் ஹனீபா பிரதம அதிதியாக கலந்து கொண்டு நிலையத்தினை திறந்து வைத்தார்..

அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற பொதுக்கூட்டத்தின் போது சாய்ந்தமருது பிரதேசத்தில் கடந்த 42 வருடங்களாக அதாவது மர்ஹும் எம்.சி.அஹமட் அவர்களுக்கு பிறகு மக்களால் தெரிவு தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற பிரதிநிதித்துவம் இல்லாத காரணத்தினால் சாய்ந்தமருது நகரம் எதுவித அபிவிருத்தியும் இன்று வெறிச்சுக் காணப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டு எமது மண்ணிலிருந்து எதிர்வரும் பாராளுமன்ற பொதுத்தேர்தலில் திறமையான மக்களின் நிலமைகளை நன்கறிந்த கல்விமான் முன்னாள் பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் அவர்களை பொதுஜன பெரமுனை சார்பாக திகாமடுல்ல மாவட்டத்தில் களமிறக்கி அமோக ஆதரவுடன் வெற்றிபெறச் செய்து பாராளுமன்றத்திற்கு அனுப்ப எல்லோரும் உதவி செய்ய வேண்டும் என்று சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையினரால் ஏகமானதாக அறிவிக்கப்பட்டது.
தேசிய நல்லிணக்கம், சகவாழ்வை அடிப்படையாக கொண்டும், நிலையான அபிவிருத்தி புதிய அரசின் கோட்பாட்டையும் அடிப்படையாகக் கொண்டும் பிரதேச மக்களின் ஒருமைப்பாட்டைக் கட்டியெழுப்பி பல்லின சமூக அமைப்பில், சமூக இருப்பையும் அபிவிருத்தியையும் குறிக்கோளாகக் கொண்டு சாய்ந்தமருதில் ஆரம்பிக்கப்பட்ட "சமூக மாற்றம் மற்றும் அபிவிருத்திக்கான மய்யம்" இன்றிலிருந்து தொழில்படும் என்றும் பொதுமக்கள் சாய்ந்தமருது - மாளிகைக்காடு பிரதேசத்தில் அடையாளம் காணப்பட்டுள்ள பிரச்சினைகள் மற்றும் புதிய அபிவிருத்தி திட்டங்கள் , ஆலோசனைகள் என்பவற்றை இந்த நிலையத்தில் எழுத்து மூலம் கையளிக்க முடியும் எனவும் அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பொது மக்கள் மகஜர்களையும் கையளித்தனர்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -