கிழக்கு மாகாண பண்பாட்டலுவலகத் திணைக்களத்தின் அனுசரணையுடன் தி/கிண்ணியா அப்துல் மஜீது வித்தியாலயத்தில் தரம் 02 ஆண்டு மாணவர்களுகிடையிலான இடம் பெற்ற சிறுவர் சித்திரப் போட்டிக்கான பரிசளிப்பு விழா நிகழ்வு
முன்னோடிகள் கலை இலக்கிய வட்டத்தின் தலைவர் பீ.ரீ.அஸீஸ் தலைமையில் இன்று (14) செவ்வாய் கிழமை நடை பெற்றது.
இப் போட்டியில் முதலிடத்தை ஜ.பாத்திமா ஷம்லா,
இரண்டாமிடம், ந.பாத்திமா கானூன்,
மூன்றாமிடம், முரை அய்யான் சுதைஸ் ஆகியோருடன் ஆறுதல் 07 பேருக்கு ஆறுதல் பரிசுகளும் வழங்கப்பட்டது.
இந் நிகழ்வில் கிண்ணியா பிரதேச செயலக கலாசார உத்தியோகததர் திருமதி, சத்திய வானி சுக்னன்,
சட்டத்தரணி ஏ.ஸீ.எம்.இப்றாகீம்,
கவிஞர்களான ஏ.எம்.கஸ்புல்லாஹ்,
ஐ.ஏ.ஹஸன், வித்தியாலய அதிபர், ஏ.எல்.எம்.நளீப் உட்பட பலர் கலந்து கொண்டனர்.