மர்ஹூம் ஏ.ஆர்.எம்.ஜிப்ரி அவர்களின் மறைவையிட்டு அம்பாரை மாவட்ட ஊடகவியலாளர்கள் சம்மேளனம் விடுத்த அனுதாப செய்தி
சிரேஷ்ட அறிவிப்பாளர், ஒளிபரப்பாளர், அதிபர் சிறந்த ஆளுமை இவை அத்தனைக்கும் சொந்தக்காரன் சிம்மக்குரலோன் ஏ.ஆர்.எம்.ஜிப்ரியின் மறைவு, அறிவுசார் ஊடக உலகில் பாரிய இடைவெளியை ஏற்படுத்தியுள்ளதாக அம்பாரை மாவட்ட ஊடகவியலாளர்கள் சம்மேளனம் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளனர்.
ஊடக ஜம்பவானும்,சிறந்ததொரு கல்வி மானுமாகிய அறிவுச் சிகரம் மர்ஹும் ஜிப்ரியின் மறைவினால் முழு நாடுமே இன்று சோகத்தில் மூழ்கியுள்ளது.
எந்தவொரு ஆத்மாவும் மரணத்தின் சுவையை அணுவித்தே தீர வேண்டும் என்ற இறை விதிக்கு அமைவாக இன்று ஜிப்ரி அவர்கள் இறையடி சேர்ந்துவிட்டார்.
மர்ஹூம் ஏ.ஆர்.எம்.ஜிப்ரி பன்முக ஆளுமைகளை வெளிக்காட்டி பலரையும் தன் வசம் கவர்ந்திருந்தார்.
அவர் உன்னத ஊடகவியலாளராகச் செயற்பட்டது மட்டுமன்றி பல ஊடகவியலாளர்களையும் உருவாக்கிய பெருந்தகையாவார் .
மர்ஹும் ஜிப்ரி. ஆசிரியராகவும், அதிபராகவும் நீண்டகாலம் பணி புரிந்து கல்வி உலகுக்கு இன, மத வேறுபாடின்றி பாரிய பங்களிப்பை செய்துள்ளார் இவருடைய பெயர் சொல்லும் வகையில் பல இளம் ஒலிபரப்பாளர்கள் இந்த துறையில் இருப்பது அவரது பணிக்கு கிடைத்த பெரும் பேறாகும்.
வானொலித்துறையில் வரலாற்றுத் தடம்பதித்துள்ள மர்ஹும் ஜிப்ரியின் வசிகர ஈமானிய செயற்பாடுகளினாலும், உயர் சுவனத்தை அடைய வேண்டும் என அம்பாரை மாவட்ட ஊடகவியலாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் கலாபூசணம் மீரா எஸ் இஸ்ஸதீன், செயலாளர் ஏ.ஜே.எம்.ஹனீபா மற்றும் அதன் உறுப்பின்களால் வெளியிடப்பட்ட அனுதாப அறிக்கையில் தெளித்துள்ளனர்
அன்னாரின் பிரிவால் துயருறும் மனைவி, பிள்ளைகள், குடும்பத்தார் , நண்பர்கள் அனைவருக்கும் அல்லாஹுத்தஆலா பொறுமையையும், இழப்பை தாங்கிக் கொள்ளும் மன தைரியத்தையும் வழங்க இறைவனைப் பிராத்திப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
யா அல்லாஹ் அன்னாருடைய பாவங்களை மன்னித்து உயர் சுவனத்தை வழங்குவாயாக அவருடைய அனைத்து ஈமாணிய செற்பாடுகளை பொருந்திக் கொள்வாயாக ஆமீன்.