தமிழ் பிரதிநிதித்துவத்தை அதிகரித்து கொள்ள அணைவரும் முன்வர வேண்டும் - வடிவேல் சுரேஷ்

க.கிஷாந்தன்-

லையகத்தில் தமிழ் பிரதிநிதித்துவத்தை எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் அதிகரித்து கொள்ள தான் பெரியவன், சிறியவன் என்ற தன்னகத்தை ஓரங்கட்டிவிட்டும், அரசியல் பிணக்குகளை ஓரங்கட்டிவிட்டும் தமிழ் பிரதிநிதித்துவத்தை அதிகரித்து கொள்ள அணைவரும் முன்வர வேண்டும் என பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.

தலவாக்கலை நகரில் 12.01.2020 அன்று மாலை ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலின் போது மலையகம் உள்ளிட்ட நாட்டு மக்கள் அணைவருக்கும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த புதிய அரசாங்கம் ஆட்சியை அமைத்துக் கொண்டது.

அதேநேரத்தில் தேர்தல் காலத்தில் மலையக மக்களுக்கு மட்டுமின்றி நாட்டில் அனைத்து மக்களுக்கும் வழங்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகள் தொடர்பில் அதனை நடைமுறைப்படுத்துகின்றார்களா என்பதை நாங்கள் உண்ணிப்பாக அவதானித்து வருகின்றோம். அத்துடன், மலையக தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வு வழங்குவதாக தேர்தல் வாக்குறுதிகள் விடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் தைப்பொங்கலுக்கு முன்பாக இந்த ஆயிரம் ரூபாவை வழங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. கட்டாயமாக இந்த ஆயிரம் ரூபாய் தைப்பொங்கலுக்கு முன் கிடைத்தால் நல்லது என எதிர்பார்க்கின்றோம்.

வடிவேல் சுரேஷ் யாருடனும் இரகசிய பேச்சுவார்த்தையை முன்னெடுக்கவில்லை. எனக்கு அவ்வாறான பேச்சுவார்த்தை தேவையும் இல்லை. இது ஒரு சுத்த பொய்யாகும்.

பதிய அரசாங்கம் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் சம்பளத்தையும், அத் தொழிலாளர்களை சிறு தோட்ட உரிமையாளர்களாகவும் ஆக்குவதற்கு தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதனை நிறைவேற்றுகின்றார்களாக என்பதையும் அவதானம் செலுத்தி வருகின்றோம். மலையகம், மலையக மக்கள், தமிழ் மக்களே எனக்கு முக்கியம். அவர்களின் உரிமை தொடர்பில் எந்த மொழியிலும் பேச்சுவார்த்தை நடத்த நான் தயார்.

ஆனால் இரகசிய பேச்சுவார்த்தை எனக்கு தேவையில்லை. ரணில் விக்கிரமசிங்க முதல் பிரதமர் மகிந்த ராஜபக்ச ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ச ஆகியோர்கள் எனது நண்பர்கள். எனது சமூகம் சார்ந்த மக்களின் வேலை திட்டங்களை முன்னெடுக்க நான் எப்போதும் தயாராகவே இருப்பேன்.

எதிர்வரும் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் பதுளை மாவட்ட அமைப்பாளர் என்ற வகையில் ஐ,தேகாவுடனே எனது பயணம் சஜித் பிரேமதாசவுடனே இணைந்து தொடரும். எமது இலக்கு அடுத்த பொது தேர்தலில் நாட்டின் அமோக வெற்றி பெற்று சஜதிதை பிரதமரக்கடி எமது மக்கிளனி நேசவைகளை பூர்த்திப்பது ஈஆகும்இ.

கல்வி காலாச்சாரம் தொழில் வாய்ப்பு என என்பவற்றுடன் தனி வீட்டு திதட்டம் என பல்வேறு தேலைகள் எமக்கு உள்ளது. அவைகள் பூரத்தியாக்ப்பட வேண்முட.. அதற்கு ஒரு சிறந்த தலைமை வேண்டும் நாட்டில் எவர் குற்றம் செய்திருந்தாலும் அவர்களை குற்றவாளி என தீர்மானிப்பது நீதிமன்றமே.

நீதிமன்றத்தின் தீர்மானத்திற்கு அரசியலை திணிக்க கூடாது. தொழிற்சங்கம், அரசியல் என்பது வேறு அதற்கு அப்பால் சென்று சமூகத்தை பாதுகாக்க வேண்டும்.

எமது சமூகம் சார்ந்த மக்களின் கோரிக்கைகள் நியாயமானதாக இருந்தால் அதனை நிறைவேற்ற வேண்டும். அதேநேரத்தில் மலையகத்தில் இருந்து பாராளுமன்றத்திற்கு தமிழ் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க வேண்டும். வடக்கு, கிழக்கில் 25 பேர் இம்முறை பாராளுமன்றத்தில் தெரிவாவார்கள்.

அதேபோல் முஸ்லிம் சமூகத்தில் 20 பேர் தெரிவாவார்கள். மலையகத்தில் 16 பேர் தெரிவாக வேண்டும். ஆனால் 9 பேரே காணப்படுகின்றனர்.

7 பேரை இழந்துவிட்டோம். அதனை மீட்டு எடுத்து அரசியல், தொழிற்சங்கம் பிணக்குகளை ஓரங்கட்டிவிட்டு தமிழ் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க மலையக அரசியல் தலைமைகள் முன்வர வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -