சுருக்குவலை அனுமதிப் பத்திரத்தை புதுப்பிப்பதற்கான முயற்சியில் திருக்கோணமலை எம்பி தெளபீக் களத்தில்

யோ.கமல்ராஜ்,எப்.முபாரக்-
திருகோணமலை மாவட்ட மீனவர்களுக்கான சுருக்குவலை அனுமதிப் பத்திரத்தை புதுப்பிப்பதற்கான முயற்சி சம்பந்தமாக மீன் பிடித்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கும்,திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக்குமிடையிலான சந்திப்பு வெள்ளிகிழமை (3) அமைச்சரின் அலுவலகத்தில் நடைபெற்றது.

இதன் போது திருகோணமலை மாவட்ட மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் இம்மாவட்ட மீனவர்கள் சுருக்கு வலைகளை இட்டு மீன்பிடிப்பது மற்றும் அதற்கான அனுமதிப்பத்திரத்தினை புதுப்பிப்பது தொடர்பாகவும் அமைச்சருடன் விரிவாக கலந்துரையாடியதாக திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் தெரிவித்தார்.

திருகோணமலை மாவட்ட மீனவர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் மற்றும் சுருக்கு வலை மீன் பிடிப்பு அனுமதிப்பத்திரம் புதுப்பித்தல் செயற்பாடுகள் அனைத்திற்கும் கூடிய விரைவில் தீர்வினை பெற்றுத்தருவதாகவும், விரைவில் திருகோணமலை மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டு மீனவர்களுடன் கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொள்ள உள்ளதாகவும் மீன்பிடி

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக்கிடம் தெரிவித்ததாகவும் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -