கல்முனை பிராந்திய சுகாதார பணிப்பாளர் பணிமனையின் புது வருட சத்தியப் பிரமாண நிகழ்வு

அகமட் எஸ். முகைடீன்-

ல்முனை பிராந்திய சுகாதார பணிப்பாளர் பணிமனையின் புது வருட சத்தியப் பிரமாண நிகழ்வு இன்று (01) புதன்கிழமை கல்முனை பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஜி. சுகுணன் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது வைத்திய கலாநிதி சுகுணன் தேசியக் கொடியினை ஏற்றிவைத்தனைத் தொடர்ந்து படை வீரர்கள் உள்ளிட்ட நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்த சகலரையும் நினைவுகூர்ந்து இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

அதிமேதகு ஜனாதிபதியின் 'நாட்டைக் கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு' என்ற தொனிப்பொருளில் அமைந்த தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு அமைய தற்போதைய மற்றும் எதிர்கால சந்தததியினரின் நலன்கருதி அர்ப்பணிப்புடன் பணியாற்றத்தக்க மனப்பாங்கை வளர்த்துக்கொள்ளும் அவசியத்தை வலியுறுத்தும் வகையிலான பத்து வாக்குறுதிகள் அடங்கிய சத்தியப் பிரமாணத்தை இதன்போது அனைத்து ஊழியர்களும் மேற்கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -