சாய்ந்தமருது பொலிவேரியன் ஐக்கிய விளையாட்டு மைதானத்தை இப்பிரதேசத்தின் சிறந்ததொரு விளையாட்டு மைதானமாக அபிவிருத்தி செய்யும் வகையில் சாய்ந்தமருதில் உள்ள விளையாட்டுக் கழகங்களின் சம்மேளனம் முன்னாள் கல்முனை மாநகர முதல்வரும் அகில இலங்கை மக்கள் கட்சியின் முக்கியஸ்தருமான கலாநிதி . சிராஸ் மீராசாஹிப் அவர்களை அவரின் இல்லத்தில் சந்தித்திருந்தனர்.
இம் மைதான விடயமாக அகில இலங்கை மக்கள் கட்சியின் தேசிய தலைவர் றிசாட் பதியுத்தீன் அவர்களின் கவனத்திற்கு கலாநிதி . சிராஸ் மீராசாஹிப் கொண்டு வந்ததனையடுத்து அவரின் பணிப்புரைக்கமைய இன்று( 20 ) சாய்ந்தமருது ஐக்கிய விளையாட்டு மைதானத்துக்கு கலாநிதி . சிராஸ் மீராசாஹிப்பின் இணைப்பாளர்கள் இந்த மைதானத்தில் முன்னெடுத்துச் செல்ல வேண்டிய அவசர தேவையாக இனங்கானப்பட்ட வேலைத்திட்டங்களை பார்வையிட்டனர்
இதன் போது சாய்ந்தமருது விளையாட்டுக்கழக சம்மேளனம்களின் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.