தோட்டததில் உள்ள தரசு நிலங்களை வெளியாட்களுக்கு பிரித்து கொடுக்கக் கூடாது.


அருணலு மக்கள் முன்னணியின் தலைவர் வைத்தியர் கே.ஆர்.கிசான் தெரிவிப்பு.
ஹட்டன் கே.சுந்தரலிங்கம்-
ல வருடங்காலமாக பல போராட்டங்கள் செய்து கடந்த அரசாங்கம் தோட்டத்தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளம் வழங்குவதாக தெரிவித்தும் பெற்றுக்கொடுக்காத நிலையில் தற்போது ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ அவர்கள் பதவியேற்று இரண்டு மாத காலத்துக்குள் தோட்டத்தொழிலாளர்களுக்கு ஆயிரம் சம்பளம் வழங்க நடவடிக்கையினை மேற்கொண்டதனையிட்டு நாங்கள் அவருக்கு நன்றி தெரிவிக்கிறோம.; என அருணலு மக்கள் முன்னணியின் தலைவர் வைத்தியர் கே.ஆர் கிசான் தெரிவித்தார்.
அருணலு மக்கள் முன்னணியும் ஸ்ரீ லங்கா பொது ஜன பெறமுனவின் தோட்ட தொழிற்சங்கமும் இணைந்து நேற்று (15) மாலை ஹட்டன் டிக்கோயாவில் நடத்திய ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் கடந்த காலங்களில் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ அவர்களுக்கு பெருவாரியான தோட்ட மக்கள் வாக்களிக்காத போதிலும் குறிப்பாக ஐம்பது சதவீதத்திற்கும் மேல் வாக்களிக்காத போதிலும், இன்று. அவர் தோட்டத்தொழிலாளர்களின் பிரச்சியினை தீர்க்க முனவந்துள்ளார.;,கடந்த காலங்களில் அருணலு மக்கள் முன்னணியும்,ஸ்ரீ லங்கா பொது ஐக்கிய முன்னணியின் தோட்ட தொழிற்சங்கமும் இணைந்து அவரின் வெற்றிக்காக நாடு முழுவதும் வேலை செய்தன.
அத்தோடு தோட்டத்தொழிலாளர்களின் சம்பள விடயம் தொடர்பாக பல போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. இப்பிரச்சினை ஜெனவா வரை கூட சென்றுள்ளது.அதே நேரம் சஜீத் பிரேமதாச அவர்கள் தோட்டத்தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளம் வழங்கப்போவதாக தெரிவித்தார்.அது நடக்காது என்பது எங்களுக்கு தெரியும.; ஆனால் மக்கள் அவர்களின் பொய்களை கேட்டு வாக்களித்தார்கள.; அவர்கள் இருந்த காலப்பகுதியில் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பான எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.எந்த ஒரு இளைஞருக்கும் எந்த வேலை வாய்ப்புக்களையும் வழங்கப்படவும்pல்லை. இந்நிலையில் புதிய அரசாங்கம் பல நல்ல தி;ட்டங்களையும் மலையகப்பகுதியில் முன்னெடுக்கப்படவுள்ளன.இதன் போது தோட்டத்தொழிலாளர்களுக்கும் ஏனைய மலையகப்பகுதியில் வாழ்பவர்களுக்கும் வீடமைப்பு மற்றும் தொழில் வாய்ப்புககளையும், உட்கட்டமைப்பு வசதிகளையும், பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இன்று 90 ஆயிரம் தொழிலாளர்கள் மாத்திரமே உள்ளனர். ஆனால் 4 லட்சத்திற்கும் மேல் சிறுபான்மை வாக்குகள் நுவரெலியா மாவட்டத்தில் மாத்திரம்; உள்ளன. ஆகவே 3 லட்சத்திற்கும் மேல் தோட்டத்திற்கு வெளியில் இருக்கிறார்கள். அவர்கள் தொடர்பாக அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.இன்று அரசாங்கம் நுவரெலியா மாவட்டததிற்கு வெளியில் உள்ளவர்களுக்கு தரிசு நிலங்களை பகிர்ந்தளித்து தேயிலை பயிர் செய்கையினை முன்னெடுக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.அரசாங்கம் ஒரு போதும் இதனை செய்யக்கூடாது.ஏனென்றால் இங்கு அனைத்தின மக்களும் மிகவும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறார்கள். வெளியாட்களை இப்பகுதியில் குடியமர்த்தினால் அதனூடாக பல பிரச்சினைகள் தோன்றும.; அத்தோடு இம்மக்களின் உரிமைகளும் பாதிப்புக்குள்ளாகும்,ஆகவே இந்த காணிகளை இங்கு வேலையில்லாது இருக்கி;ன்ற இளைஞர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இன்று இளைஞர்கள் பலர் சுய தொழில்களை செய்வதற்கு ஆர்வமாக உள்ளார்கள.; அவர்களுக்கு குறிப்பாக இங்குள்ளவர்களுக்கு இக்காணிகள் வழங்குவதன் மூலம் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படுவதனை தவிர்த்து கொள்ள முடிவதுடன், நாட்டுக்கும் அபிவிருத்தியினையும் பெற்றுக்கொள்ள முடியுமென அவர் மேலும் தெரிவித்தார்.
இதன் போது ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தோட்டத்தொழிலாளர் சங்கத்தின் அம்பகமுவ பிரதேச அமைப்பாளர் லெச்சுமனன் கருணாநிதி,உட்பட நுவரெலியா மாவட்டத்தைச் சேர்ந்த பல அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
இங்கு உரையாற்றிய ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தோட்ட தொழிற்சங்க அமைப்பாளர் கருணாநிதி கருத்து தெரிவிக்கையில் அதிமேதகு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ அவர்கள் ஒரு இனிபான செய்தியினை சொல்லியுள்ளார்.கடந்த இரண்டு நூற்றாண்டுக்கு மேலாக எமது பெற்றோர்கள் சம்பள விடயம் தொடர்பாக பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளனர்.ஆனால் எவ்வித தீர்வும் கிடைக்கவில்லை. இந்நிலையில் இன்று தான் அதற்கு ஓரளவான நிவாரணம் கிடைத்துள்ளது அதற்காக உழைத்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானுக்கு ஜனாதிபதிக்கும் நன்றி தெரிவிப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -