முன்மாதிரியான நாட்டிற்கு முன்மாதிரியான பாடசாலை

எஸ்.ஏ.எம்.மஹ்சூம்-

ட்/மம /மாக்கான் மாக்கார் தேசிய பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டியினை முன்னிட்டு,

அறபா இல்லம் மற்றும் challenging students Association அமைப்பினரால் மாணவர்களிற்கு மத்தியில் இரத்த தானம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்,இல்ல விளையாட்டு போட்டியின் இறுதி நாளான நேற்று இரத்த தான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மட் /மாக்கான் மாக்கார் தேசிய பாடசாலையின் அதிபர் MM முகைதீன் TR அவர்களின் தலைமையில் நிகழ்வு இடம்பெற்றது.

இம் முன்மாதிரி நிகழ்வினை பாடசாலையின் பிரதி அதிபர் AM மஜீத் அவர்கள் ஆரம்பித்து வைத்தார்கள். இந்நிகழ்வில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கி பொறுப்பதிகாரி K விவேக் அவர்களும் ,போதனா வைத்தியசாலையின் தாதி உத்தியோகத்தர்கள் பாடசாலையின் சிரேஷ்ட ஆசிரியர்கள், அறபா இல்ல பொறுப்பாசிரியர் T.தாரிக் , CSA இளைஞர் அமைப்பின் தன்னார்வ தொண்டர்கள் , SHED அமைப்பின் தலைவர் K.Wajidh என பல சமூக ஆர்வலர்கள் கலந்து சிறப்பித்தார்கள்.

இறை உதவியால் இவ் இரத்த தான நிகழ்வில் அதிகமாக பொதுமக்கள், ஆசிரியர்கள், இளைஞர்கள், மாணவர்கள் என பலரும் தங்களது உதிரங்களை தானம் செய்ததை காணக்கூடியதாக இருந்தது.இந்நிகழ்வில் மாணவர்களிற்கான விழிப்புணர்வும் வழங்கப்பட்டது.

பாடசாலை இல்ல விளையாட்டு போட்டியில் இளைஞர்களால் இப்படியான முன்மாதிரி நிகழ்வு இடம்பெறுவது பாராட்டத்தக்கது என மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் குருதி வங்கி பொருப்பாளர் k.vivek அவர்கள் பாராட்டினார்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -