உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸால், இலங்கையிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. சைனாவிலிருந்து வரும் விமானப் பயணிகள் தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.
சைனாவில் இந்த வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 170 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை வைரஸ் தாக்குதல் உறுதியாகியுள்ள நோயாளிகளின் எண்ணிக்கை ,7800 ஆக உயர்ந்துள்ளது.
இங்கிலாந்தை சேர்ந்த சவுத்ஹாம்ப்டன் பல்கலைக்கழக ( University of Southampton ) ஆராய்ச்சியாளர்கள் சைனாவிலிருந்து பிற நாடுகளுக்கு நடைபெறும் விமானம் உள்ளிட்ட பயணங்களை மையப்படுத்தியே குறித்து ஆய்வை மேற்கொண்டனர்.
இந்த ஆய்வு குறித்து அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், கொரோனா வைரஸ் வேகமாக பரவும் அபாயம் 30 நாடுகளில் அதிகமுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அவ் அபாயம் அதிகமுள்ள நாடுகளின் பட்டியல்
1.தாய்லாந்து
2.ஜப்பான்
3. ஹொங்கொங்
4.தாய்வான்
5.தென் கொரியா
6.அமெரிக்கா
7.மலேசியா
8.சிங்கப்பூர்
9.வியட்னாம்
10.அவுஸ்திரேலியா
11.இந்தோனோசியா
12.கம்போடியா
13.மக்காவு
14.பிலிப்பைன்ஸ்
15.ஜேர்மனி
16.கனடா
17.ஐக்கிய இராச்சியம்
18.ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
19.இத்தாலி
20.ரஷ்யா
21.பிரான்ஸ்
22.நியுசிலாந்து
23.இந்தியா
24.ஸபெயின்
25.துருக்கி
26.எகிப்து
27.இலங்கை
28.மாலைதீவு
29.நெதர்லாந்து
30.மியன்மார்
ஏனைய நாடுகள் இதற்கு அடுத்தடுத்த நிலையிலுள்ளது