ஓட்டமாவடி - மீராவோடை மீரா ஜும்ஆ பள்ளிவாசலில் சுதந்திர தின நிகழ்வும், சிரமதானமும்.



எச்.எம்.எம்.பர்ஸான்-

ட்டமாவடி - மீராவோடை மீரா ஜும்ஆப் பள்ளிவாசலில் சுதந்திர தின நிகழ்வும், சிரமதானமும் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஓட்டமாவடி பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் பள்ளிவாயல் உப தலைவருமான கே.பீ.எஸ்.ஹமீட் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கைத் திருநாட்டின் 72 வது சுதந்திர தினம் பெப்ரவரி மாதம் 4ம் திகதி இடம்பெறவுள்ளது. அன்றைய தினம் நாட்டில் பல்வேறு இடங்களில் சுதந்திர தின நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

அதேபோன்று எமது மீராவோடை மீரா ஜும்ஆப் பள்ளிவாயலிலும் தலைவர் ஏ.எல்.அலியார் ஹாஜியார் அவர்களின் தலைமையில் அன்றைய தினம் காலை 7.30க்கு சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சிகளும் அதனைத் தொடர்ந்து பள்ளிவாயல் வளாகம் சிரமதானமும் செய்யப்படவுள்ளது.

இதில் பொலிஸ், இராணுவ அதிகாரிகள், உலமாக்கள், கல்விமான்கள் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளனர்.

எனவே இந்நிகழ்வில் அனைவரையும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் வேண்டிக் கொள்கின்றோம் என கே.பீ.எஸ்.ஹமீட் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -