ஹட்டன் கே.சுந்தரலிங்கம்-
தரம் 01 மாணவர்களை உள்வாங்கும் நிகழ்வு நாடுகெங்லும் இன்று (16) திகதி முன்னெடுக்கப்பட்டன. தேசிய நிகழ்வு மாத்தளையில் கல்வி அமைச்சர் தலைமையில் நடைபெற்றது.
அதற்கு இணையக பல நிகழ்வுகள் பாடசாலைகளில் ஒழுங்கு செய்யப்பட்nருந்தன.
மத்திய மாகாண தமிழ் மாணவர்களை தரம் ஒன்றுக்கு உள்வாங்கும் நிகழ்வு இன்று (16) ஹைலன்ஸ் கல்லூரியில் ஹட்டன் வலயக் கல்விப்பணிப்பாளர் பி.ஸ்ரீதரன் தலைமையில் கல்லூரியின் அதிபர் ஆர்,ஸ்ரீதரன் அவர்களின் ஏற்பாட்டில் மிக சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் அதிதிகள் மற்றும் தரம் 01 மாணவர்கள் பேண்ட் வாத்தியங்கள் முழங்க ஹட்டன் பாடசாலையின் பிரதான மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டன.
அதனை தொடர்ந்து மாணவர்கள் மகிழ்ச்சி படுத்தும் வகையில் பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.
இதன் போது சுமார் 96 மாணவர்கள் ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரிக்கு உள்வாங்கப்பட்டன.
இம் மாணவர்கள் இலவச பாடநூல்கள்,இலவச சீருடை, டை, சின்னம், ஆகியனவும், மக்கள் வங்கி இலங்கை வங்கி ஆகியன மாணவர்களுக்கு இதன் போது சேமிப்பு புத்தகங்களும் பெற்றுக்கொடுக்கப்பட்டதுடன், இன்றை தினத்தினை நினைவு கூறும் வகையில் தரம் இரண்டு மாணவர்களால் நினைவு சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
இதன் ஜனாதிபதியின் மரம் நடுகை வேளைத்திட்டத்திற்கு அமைவாக ஒவ்வொரு மாணவருக்கும் மரக்கன்றுகளும் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வின் பிரதம அதிதியாக மாகாண மேலதிக கல்விப்பணிப்பாளர் ஏ.சத்தியேந்திரா,ஹட்டன் வலயக்கல்விப்பணிப்பாளர் பி.ஸ்ரீதரன், கல்வி வலயத்தின் உதவிக்கல்விப்பணிப்பாளர்கள்,அதிபர்கள் ஆசிரியர்கள்,பெற்றோர்கள் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் முக்கியஸத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.