கிரகணம் தெண்படும்போது இஸ்லாமிய வழிகாட்டல்களைக் கடைபிடிக்கவும் - பிறைக்குழு வேண்டுகோள்

ஐ. ஏ. காதிர் கான்-

சூரிய கிரகணம் தெண்படும் போது இஸ்லாமிய வழிகாட்டல்களைக் கடைப்பிடித்து ஒழுகுமாறு, இலங்கை வாழ் அனைத்து முஸ்லிம்களிடமும் அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமாவின் பிறைக் குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பில் அ.இ.ஜ.உ. பிறைக்குழு விடுத்துள்ள விசேட அறிக்கையில்,
சூரியன் முழுமையாகவோ அல்லது அதன் ஒரு பகுதியாகவோ மறைவதை ஒருவர் நேரில் காணும்போது அல்லது பலரும் கண்டதாக அறிவிக்கும் போது, முஸ்லிம்கள் கிரகணத் தொழுகையில் ஈடுபடுமாறும் பொதுமக்களைக் கேட்டுள்ளது.

கிரகணத் தொழுகையைக் கூட்டாக நிறைவேற்றுவது, இஸ்லாத்தில் வலியுறுத்தப்பட்ட சுன்னத்தான வழி முறையாகும். ஆகவே, இதனைக் கூட்டாக நிறைவேற்றுவதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறும், பள்ளிவாசல் நிர்வாகிகளையும் ஆலிம்களையும், பிறைக் குழு வேண்டிக் கொள்கிறது. 

வியாழக்கிழமை (26) வலைய சூரிய கிரகணம் (Annular Solar Eclipse) ஏற்படவுள்ளதாக, வானிலை அவதான நிலைய அறிக்கைகள் தெரிவிக்கின்றன. நிகழவிருக்கும் இச்சூரிய கிரகணம், இலங்கையின் பல பாகங்களிலும் பகுதி கிரகணமாகத் தெண்படும் அதேவேளை, சில மாவட்டங்களில் சில நிமிடங்கள் மாத்திரமே வலைய கிரகணமாகவும் தெண்படும்.

கொழும்பு நேரப்படி காலை 8:10 மணிக்கு பகுதி கிரகணம் ஆரம்பமாகி, காலை 11:24 மணியுடன் கிரகணம் நீங்கி, சூரியன் வழமையான நிலைக்குத் திரும்பி விடும் என்றும் வானிலை அவதான நிலைய அறிக்கைகள் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -