சாய்ந்தமருது பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் வருடாவருடம் காட்டு யானைகளின் தாக்கத்திற்குள்ளாகும் பொதுமக்கள் , விவசாயிகள் மற்றும் விவசாய விளை நிலங்கள் ஆகியவற்றை பாதுகாக்கும் வகையில் மின்சார வேலி அமைப்பது சம்பந்தமாக வனஜீவராசிகள் வளங்கல் ராஜாங்க அமைச்சர் விமலவீர திசநாயக சாய்ந்தமருது பிரதேசத்திற்கு இன்று ( 25 ) விஜயம் செய்திருந்தார்.
சாய்ந்தமருது _ மாளிகைக்காடு ஜூம்ஆப் பெரிய பள்ளி வாசல் நம்பிக்கையாளர் சபை மற்றும் கல்முனை மாநகரசபை சாய்ந்தமருது சுயேட்சை குழு உறுப்பினர்களின் வேண்டுகோளின் பேரில் விஜயம் செய்த ராஜாங்க அமைச்சர் காட்டு யானைகள் சாய்ந்தமருது பிரதேசத்திற்கு உள் நுளையும் பொலிவேரியன் கிராமத்திற்கு நேரடியாக சென்று நிலமைகளை கேட்டறிந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரியப்படுத்துவதாக உறுதியளித்தார்.