வறுமைக்கோட்டின் கீழ் வாழும் 100 வறிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பிரதேச அமைப்பாளர் அன்ஸார் ஆசிரியர் தலைமையில், அண்மையில் மதவாக்குளம் மகா வித்தியாலய மண்டபத்தில் இடம்பெற்றது.
பீ.சீ.எம்.எச். (BCMH) கல்வி நிறுவனத் தலைவரும் அ.இ.ம.கா. புத்தளம் மாவட்ட அமைப்பாளருமான அலி சப்ரி ரஹீம், இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு தனது சொந்த நிதி ஒதுக்கீட்டில், குறித்த மாணவர்களுக்கு இக்கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தார்.
நிகழ்வில் கெளரவ அதிதிகளாக, அ.இ.ம.கா. பணிப்பாளர் றிஸ்வான், செயலாளர் ஜெளஸி, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இல்லியாஸ், மதவாக்குளம் வித்தியாலய அதிபர் பஷீர், பள்ளிவாசல் நம்பிக்கையாளர் பாரூக் மற்றும் கல்வி நிறுவன ஊடக இணைப்பாளர் சில்மியா யூசுப் உள்ளிட்ட அ.இ.ம.கா. ஊடக இணைப்பாளர்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.