கிழக்கு மாகாண கல்வித்திணைக்கள 'வட்ஸ்அப்' பதிலளிப்பில் சம்மாந்துறை வலயம் முதலிடம்.


காரைதீவு நிருபர் சகா-
கிழக்கு மாகாண கல்வித்திணைக்களத்தின் வலயக்கல்விப் பணிப்பாளர்களுடனான மாகாண கல்விப்பணிப்பாளரின் 'வட்ஸ்அப்' குழும பதிலளிப்பில் சம்மாந்துறை வலயம்முதலிடம் பெற்றுள்ளது.

இவ்வாண்டின் ஏப்ரல் மாதத்திலிருந்து இதுவரை 121 தகவல்கள் பரிமாறப்பட்டதாகவும் அதற்கு உடனடியாக பதிலளித்த வலயக்கல்விப்பணிப்பாளர் வரிசையில் அதிகூடிய 102 தகவல்களுக்கு பதிலளித்த சம்மாந்துறை வலயம் முதலிடம் பெற்றுள்ளது.

அதற்காக மாகாணக்கல்விப்பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர் சம்மாந்துறை வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.சஹூதுல் நஜீமிற்கு பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
இரண்டாமிடத்தில் 90தகவல்களுக்கு பதிலளித்து கல்முனை வலயமும் மூன்றாமிடத்தில் 85தகவல்களுக்குப் பதிலளித்து திருக்கோவில் வலயமும் திகழ்கின்றன.
76தகவல்களுக்கு பதிலளித்த கல்குடா மற்றும் மட்டு.மத்தி வலயமும் நான்காம் இடத்தைப்பெற 74க்கு பதிலளித்து மட்டு.மேற்கு வலயம் 6ஆம் இடத்தைப்பெற்றது.
ஏனைய வலயங்கள் அடுத்தடுத்த கட்டங்களில் பெற ஆகக்குறைந்த பதிலளிப்பினை அதாவது ஆக 15 ற்குப் பதிலளித்த திருகோணமலை வலயம் இறுதி ஸ்தானத்தில் அதாவது 17வது ஸ்தானத்தில் உள்ளது.
இதனை கிழக்கு மாகாண கல்வித்திணைக்கள புள்ளிவிபர தரவுப்பதிவேடு வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -