பலஸ்தீன் அரசு உயிா்த்த ஞாயிறு தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி

பர்ல மாதம் 21ஆம் திகதி இடம்பெற்ற உயிா்த்த ஞாயிறு தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக பலஸ்தீன் அரசு சாா்பாக இலங்கையிலுள்ள பலஸ்தீன் துாதரகம் பத்து இலட்சம் ருபாவை அன்பளிப்பாக வழங்கியுள்ளது. கொழும்பு 7 இல் உள்ள பலஸ்தீன் துாதரக காரியாலயத்தில் இடம் பெற்ற நத்தாா் மரத்திற்கு தீபம் ஏற்றும் நிகழ்வில் கலந்து கொண்ட அதி மேற்ராணியாா் கார்டினல் மெல்கம் ரன்ஜிதிடம் இலங்கைக்கான பலஸ்தீன துாதுவா் கலாநிதி சுகைர் செய்யட் நன்கொடைக்கான காசோலையை கையளித்தாா்.
உயிா்த்த ஞாயிறு தின தாக்குதலால் மௌன அஞசலியும் செலுத்தப்பட்டது. பலஸ்தீனப் போராட்டத்திற்கு இலங்கை அரசும் மக்களும் அளித்து வரும் ஆதரவுக்கு நன்றி தெரிவித்து 2014்இல் இஸ்ரேலியா்கள் மேற்கொண்ட தாக்குதலின் போது இலங்கைத் தொழிலாளா்கள் தமது சம்பளத்திலிருந்து அன்பளிப்பாக வழங்கியதும் காசாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 2014இல் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வழங்கிய நிதியுதவிகளை நாம் பாராட்டுகின்றோம். அதேபோன்று உயிா்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவா்களுக்காக பலஸ்தீன் ஜனாதிபதி மற்றும் மக்கள் சாா்பில் 10 இலட்சம் ருபாவை அன்பளிப்பாக வழங்குவதாக தெரிவித்தாா். மதத் தலைவா்கள் ,ராஜதந்திரிகள் உட்பட பெரும் தொகையானவா்கள் இந் நிகழ்வில் கலந்து கொண்டனா்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -