சரத் வீரசேகர கொழும்பு மாவட்டத்தில் மொட்டுக்கட்சி சார்பாக அங்கு களமிறங்கவுள்ளார் .அம்பாறையில் சுதந்திரக் கட்சி சார்பாக தற்போதைய எம்பி சிறியாணி மொட்டுக்கட்சி சார்பாக தற்போதய ராஜாங்க அமைச்சர் விமலவீர திசாநாயக்க ஆகியோருடன் மொட்டுக் கட்சி சார்பாக அதாவுல்லாஹ் 3 ம் ஆசன வெற்றி நோக்கி இந்த நகர்வு செய்யப்பட்டுள்ளது.
அம்பாறையில் ஒரு எம்பி பெறவேண்டுமானால் குறைந்தது 40 ஆயிரம் வாக்குகள் போதுமானது .ஆனால் தற்போது அம்பாரை மாவட்டத்தில் அளிக்கப்பட்டுள்ள மொத்த வாக்குகளின் அடிப்படையில் 411.570 வாக்குகளில் ஒரு எம்பிக்கான வாக்குகளாக 58 ஆயிரம் வாக்குகள் பெற வேண்டும் .ஆனால் இறுதி சுற்று எண்ணிக்கை என்று வரும்போது 40 ஆயிரம் வாக்குகள் போதுமானது.
நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் மொட்டுக்கட்சி 135.058 வாக்குகள் பெற்றுள்ளது .இந்த வாக்குகளே மொட்டு அம்பாறையில் 3 ஆசனங்கள் பெறுவதற்கான வாக்குகளாகவே உள்ளது. இந்தக் கணக்கு என்பது முஸ்லிம் காங்கிரஸ் ஐதேக யை விட்டு தனியாக களமிறங்கினால் மட்டுமே இது சாத்தியமாகும் .
ஆனால் ஐதேக முஸ்லிம் காங்கிரஸ் மீண்டும் கூட்டாக களமிறங்கினால் இந்தக் கூட்டு மீண்டும் 4 ஆசனங்கள் பெற்று விடும்.மொட்டு-சுதந்திரக் கட்சி 2 ஆசனங்கள் மட்டுமே பெறும். அப்படி வருமனால் அதாவுல்லாஹ் வெற்றி பெற முடியாது.
முஸ்லிம் காங்கிரஸ் ஐதேக வை விட்டு தனியாக அல்லது ரிசாத் அணியுடன் இணைந்து களமிறங்கினால் 3+2+1+1 என்ற அடிப்படையில்தான் வெற்றி ஆசனங்கள் அமையும்.மொட்டு-3,முஸ்லிம் காங்கிரஸ்-2 ,ஐதேக-1 தமிழ் கூட்டமைப்பு-1 .
ஐதேக முஸ்லிம் காங்கிரஸ் மீண்டும் கூட்டாக களமிறங்கினால் இந்தக் கூட்டு மீண்டும் 4 ஆசனங்கள் பெற்று விடும். 4+2+1+1 என்ற அடிப்படையில்தான் வெற்றி ஆசனங்கள் அமையும். முஸ்லிம் காங்கிரஸ்- ஐதேக கூட்டு -4, மொட்டு- 2 தமிழ் கூட்டமைப்பு-1.
மொட்டுக் கட்சியில் அதாவுல்லாஹ் வெற்றி பெற முடியுமா?
ஆம் அதற்கான வாய்ப்பு மிகவும் சுலபமாகவுள்ளது. அதாவுல்லாஹ் மொட்டுக் கட்சியில் 4 காவது இடமென்றால் அதாவுல்லாஹ் வெற்றி பெறமாட்டார் என்ற பார்வையில்தான் நாம் கடந்த வாரம் அதாவுல்லாஹ் வெற்றி பெறமாட்டார் என்று சிறு செய்தி தந்திருந்தோம் .
இப்போதும் சொல்லுவோம் அதாவுல்லாஹ் மொட்டுக் கட்சியில் 4 காவது இடமென்றால் அதாவுல்லாஹ் வெற்றி பெறமாட்டார்.
முன்னாள் எம்பி சரத் வீரசேகர அம்பாறையை விட்டு கொழும்புக்கு நகர்ந்து போனதும் அம்பாறையில் அதாவுல்லாஹ்வின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சொல்ல முடியும்!
அதாவுல்லாஹ் அம்பாறை மாவட்டம் முழுவதும் இருந்து சுமார் 30 ஆயிரம் முஸ்லிம் வாக்குகள் பெற்றாலே போதுமானது அவரது வெற்றி உறுதி செய்யப்படும்.ஆனால் அதாவுல்லாஹ் இம்முறை குறைந்தது 40 ஆயிரம் கடந்து வாக்குகள் பெறும் நிலை வந்துள்ளது .
காரணம் இம்முறை கல்முனை தொகுதிக்கு எம்பி இல்லை. மொட்டுக் கட்சியிலோ அல்லது காங்கிரஸ் கட்சியிலோ சாய்ந்தமருது வாக்குகள் இல்லாமல் யாரும் வெற்றி பெற முடியாது.இம்முறை சாய்ந்தமருது வாக்குகள் கல்முனைக்கு இல்லை.அதனால் கல்முனை பெருமளவு மக்கள் இம்முறை அதாவுல்லாஹ்வுக்கு வாக்களிக்கும் ஒரு வாய்ப்புள்ளது.
நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலில் கல்முனை தொகுதியில் இருந்து மொட்டுவுக்கு 7256 வாக்குகளும் ,சம்மாந்துறை தொகுதியில் இருந்து 7151 வாக்குகளும் ,பொத்துவில் தொகுதியில் இருந்து 20116 வாக்குகளும் கிடைத்துள்ளது .இந்த வாக்குகள் என்பது 3 தொகுதிகளிலும் 3 இன மக்களுக்கும் சொந்தமானது.
ஆனால் இம்முறை அக்கரைப்பற்றில் இருந்து சுமார் 17 ஆயிரம் வாக்குகள், அட்டாளைச்சேனை பிரதேசம் 3 ஆயிரம், நிந்தவூர் 2 ஆயிரம் வாக்குகள், சம்மாந்துறை 3 ஆயிரம், சாய்ந்தமருது 5 ஆயிரம், கல்முனை 5 ஆயிரம், இறக்காமம் 2 ஆயிரம் ,பொத்துவில் 3 ஆயிரம் என்று சுமார் 40 ஆயிரம் வாக்குகள் அதாவுல்லாஹ் பெறும் நிலை உள்ளது.
சிங்கள அரசு மற்றும் சிங்கள இனவாதிகளிடம் அதாவுல்லாஹ் நெருக்கமாக உள்ளார்.முஸ்லிம்கள் மத்தியில் அதாவுல்லாஹ்வின் குரல் அவசியமான ஒரு தேவையாக உள்ளது .
சிங்கள அரசு மற்றும் சிங்கள மக்களிடம் இருந்து அந்நியப்படுத்தப்பட்டுள்ள வெறுக்கப்பட்டுள்ள ஹக்கீம்-ரிசாத் கம்பனியை முஸ்லிம் மக்கள் ஓரங்கட்டவேண்டிய தேவை உள்ளது.அதேவேளை சிங்கள அரசு மற்றும் சிங்கள மக்கள் விரும்பும் அதாவுல்லாஹ்வை வெற்றி பெற வைக்க வேண்டிய அவசிய தேவையுள்ளது .
குறிப்பாக கிழக்கு முஸ்லிம்களின் நலன் கருதி அதாவுல்லாஹ்வை வெற்றி பெற வைக்க வேண்டிய மிகப்பெரிய தேவை உள்ளது .இது வீதி அமைக்க கட்டிடம் கட்ட வேலைவாய்ப்பு பெறவல்ல .
முஸ்லிம் மக்கள் ஒரு இக்கெட்டான நெருக்கடிக்குள் சிக்குண்டுள்ள இந்த நேரத்தில் அதாவுல்லாஹ்வின் குரல் மிகவும் அவசியமான ஒன்று. பொத்துவில் தொகுதியில் அக்கரைப்பற்று படித்தவர்கள் அதிகம் கொண்ட ஊர்.
அதனால் அந்த மக்கள் பாகுபாடின்றி அதாவுல்லாஹ்வுக்கு ஒவ்வொரு அக்கரைப்பற்று வாக்காளனும் வாக்களித்து மாவட்டத்தில் மற்ற ஊருக்கெல்லாம் ஒரு முன்னுதாரணமாக வெளிக்காட்டி வெற்றி பெற வைக்க வேண்டும்.
அதாவுல்லாஹ் 40 ஆயிரம் கடந்த மனாப்பை பெறுவாரானால் அதாவுல்லாஹ் மொட்டில் 2 ஆவது ஆசனமாக வெற்றி பெறுவார்.இது அக்கரைப்பற்று மக்களின் கையில் தங்கியுள்ளது.
அட்டாளைச்சேனை மக்களும் வாக்குகளும்
அட்டாளைச்சேனையில் பெருமளவு மக்கள் ஒரு போதும் அதாவுல்லாஹ்வுக்கு வாக்களிக்கப் போவதில்லை . அதை கடந்த காலங்களில் உதுமாலப்பையின் உச்சபட்ச அதிகாரங்கள் மூலம் பார்த்திருப்போம். இனிமேலும் அட்டாளைச்சேனையில் அதாவுல்லாஹ் எதிர்பார்க்கவும் வேண்டியதில்லை அதேவேளை அட்டாளைச்சேனையில் அதாவுல்லாஹ் பிரதேச செயலகம் மற்றும் பிரதேச சபை ஆகியவற்றை இன்னும் தனது கட்டுப்பாட்டிற்கு கொண்டுவரவில்லை .
மறுபுறம் தற்போது அட்டாளைச்சேனையில் அதாவுல்லாஹ்வின் ஆதரவுக்காரர்கள் என்று சேர்ந்தவர்கள் யாருமே 10 வாக்குகள் பெறக் கூடியவர்கள்அல்ல.இவர்களைக் கொண்டு அதாவுல்லாஹ் அட்டாளைச்சேனையில் ஒரு போதும் வாக்கு வேட்டை செய்ய முடியாது.
அதற்கு பல காரணங்கள் உள்ளது.இருந்த போதிலும் கல்முனை சம்மாந்துறை மக்களை கடந்து இம்முறை அதாவுல்லாஹ்வை வெற்றி பெற வைக்க வேண்டிய தார்மீக பொறுப்பு பொத்துவில் தொட்டு நிந்தவூர் வரையுமான மக்களின் கையில் உள்ளது.
ஹக்கீம் –ரிசாத் கம்பெனிக்கு வாக்களித்து மக்கள் இன்னும் இன்னும் அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்லாமல் சிங்கள அரசும் சிங்கள மக்களும் விரும்பும் அந்த ஒருவருக்கு வாக்களித்து நிம்மதி பெறுவோம் .
ஆனாலும் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு கட்சிகளின் இறுதிக் கூட்டு மற்றும் தனித்து என்ற நிலை வரும்போது இறுதி ஆய்வொன்று செய்வோம்.
தற்போதைய நிலையில் அம்பாறையில் அதாவுல்லாஹ்வின் வெற்றிக்கு வழிவிட்டு சரத் வீரசேகர கொழும்புக்கு செல்லுவதாக திட்டம் .அதனால் அதாவுல்லாஹ் வெற்றி பெருவரா என்ற ஒரு ஆய்வு . ஆம் வெற்றி பெறுகின்றார் ..
அவர் வெற்றி பெற்றாலும் அவர் அம்பாறை என்றாலும் அம்பாறை கடந்து திருகோனமலை .மட்டக்களப்பு மாவட்ட மக்களையும் பார்க்க வேண்டிய பாரிய பொறுப்பு உள்ளது.அத்துடன் 3 மாவட்டத்திலும் அதாவுல்லாஹ் எழுர்ச்சி பெறுவதற்கான வாய்ப்பு பிரகாசமாகவுள்ளது.
அதாவுல்லாஹ் எப்போதும் தனது போனை ஆப் பண்ணி வைக்காமல் கட்சித் தொண்டனுடன் நெருக்மாக மற்றும் ஊடக நெருக்கம் இருக்குமானால் அவரது அரசியல் பயணம் நீண்ட காலம் நிலைக்கும் .