காரைதீவு பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட மாளிகைக்காடு ரிஃபா பாலர் பாடசாலையின் கலை நிகழ்வும் விடுகை விழாவும் நேற்று (20) சாய்ந்தமருது கமு/றியாழுல் ஜன்னா வித்தியாலயத்தில் பாலர் பாடசாலையின் அதிபர் அனைஸ் முஸ்தபா தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கமு/றியாழுல் ஜன்னா வித்தியாலய அதிபர் எம்.ஐ. சம்சுடின், அல்- அஸ்ரக் தேசிய பாடசாலை அதிபர் ஏ.ஏ.கபூர் மற்றும் கௌரவ அதிதிகளாக காரைதீவு பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.ஜெஸ்மிர் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் பாராட்டு நிகழ்வுகளும் நடைபெற்றது.