உயிர்த்த ஞாயிறு தாக்குதல் காரணமாக உயிர் சேதம் மாத்திரமன்றி எம்முடைய பொருளாதாரமும் மாபெரும் பின்னடைவைச் சந்தித்தது. உரிய நேரத்தில் உரிய முடிவுகளை மேற்கொள்ளாது தேசிய பாதுகாப்பை துச்சமாக கருதி செயற்பட்டமையால் இப்பாரிய அழிவு ஏற்பட்டுள்ளது. இவ்வனைத்திற்கும் முன்னைய அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும். இத்தாக்குதல் காரணமாக கொழும்பு டொக்யார்ட் நிறுவணத்திற்கு (Colombo Dockyard PLC ) சர்வதேசத்திடமிருந்து எமக்கு கிடைக்கப்பெற்ற அமெரிக்க டொலர்கள் 50 மில்லியன் பெறுமதியான ஆர்டர்கள் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் முன்னெடுக்கப்பட்ட நாளில் இரத்துச் செய்யப்பட்டுள்ளது என்பதை இங்கே வந்தவுடன் அறியக்கிடைத்தது.
கடந்த நான்கு ஆண்டுகளாக முன்னெடுத்த திறமையான ஆட்சியில் திருட்டுச் செயல்கள் இடம்பெற்றன. மத்திய வங்கி கொள்ளையின் காரணமாக மாபெரும் அழிவு ஏற்பட்டது. திறமையான பொருளாதார முகாமைத்துவம் இன்மையால் பொருளாதாரம் சீரழிந்தது. ஐந்து முதல் ஆறு மாத காலப்பகுதியில் அழிவடையவிருந்த பொருளாதாரம் சாரஹானின் தாக்குதல் காரணமாக அச்சந்தர்பத்திலே சரிந்து விழுந்தது.
ஜனாதிபதி பிரேமதாச 1993 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 01 ஆம் நாள் இந்நிறுவணத்தை தனியார்மயப்படுத்திய போதிலும் சர்வதேச ரீதியில் எம்முடைய நாட்டிற்கு வழங்கப்படும் ஆர்டர்கள் மற்றும் இவர்களின் திறமை தொடர்பில மகிழ்ச்சியடைய வேண்டும். கடந்த அரசாங்கம் முன்னெடுத்த அழிவுகள் தொடர்பில் நாம் வருத்தமடைகின்றோம். எம்முடைய நாட்டு பொருளாதாரம் ஐந்து ஆறு ஆண்டுகள் அல்ல 25 – 30 ஆண்டுகளிற்கு பின்நோக்கித் தள்ளப்பட்டுள்ளது. அவர்களால் முன்னெடுக்கப்பட்ட களவுகள், ஊழல்கள் சொல்லில் அடங்காதவை. அதுவே உண்மை. அவர்கள் நாட்டை அபிவிருத்திச் செய்வதைக் காட்டிலும் ராஜபக்ச குடும்பம் மற்றும் அரசாங்கத்திற்கெதிரான செயற்பாடுகளை முன்னெடுத்து மாபெரும் கொள்ளை மற்றும் களவுகளில் ஈடுபட்டுள்ளார்கள். அவர்கள் ராஜபக்சவின் செயற்பாடுகளை விமர்சிப்பதை முகமூடியாக அணிந்து இந்நாட்டு மக்களிற்குச் சொந்தமான பெருந்தொகையான நிதியை கொள்ளையிட்டுள்ளார்களென துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் வீதி, பெருந்தெருக்கள் அபிவிருத்தி அமைச்சர் ஜோன்ஸ்டன் பர்னாந்து தெரிவித்தார்.
இலங்கையில் கட்டப்பட்ட 02 புதிய வழிக்காட்டி படகுகளை (Piolat Boats) இன்று (23.12.2019) கொழும்பு துறைமுகத்திற்கு சொந்தமாக்கும் நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலே அமைச்சர் இக்கருத்தை வெளியிட்டார். ஒரு வழிக்காட்டி படகின் நீளம் 12 மீட்டர்கள் அகலம் 5.5 மீட்டர்களாகும்.
இப்படகுகள் மூலம் ஒரு மணித்தியாலத்திற்கு 22 கடற் மைல் வேகத்தில் பயணிக்கலாம். இவ்விரு படகுகளும் கொழும்பு டொக்யார்ட் தனியார் நிறுவனத்தால் கட்டப்பட்டுள்ளதுடன் பைலட் 16 (Piolat 16) மற்றும் பைலட் 17 (Piolat 17) என இவ்விரு படகுகளும் பெயரிடப்பட்டுள்ளன. இலங்கை துறைமுக அதிகார சபையினால் இவ்விரு படகுகளும் துறைமுக செயற்பாடுகளுக்கு பயன்படுத்தப்படும். இதனுடன் இணைந்து இலங்கையில் தயாரிக்கப்பட்ட 08 படகுகள் அதிகார சபையிடம் உள்ளது. கொழும்பு துறைமுகத்திற்கு வருகைத்தருகின்ற கப்பல்களிற்கு தரமான சேவையினை இலங்கை துறைமுக அதிகார சபையினால் வழங்க இயலும். இவ்விரு படகுகளினதும் பெறுமதி அமெரிக்க டொலர் 3.12 மில்லியன்களாகும்.
கொழும்பு துறைமுக வளாகத்தில் நடைப்பெற்ற இந்நிகழ்வில் துறைமுக அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத், துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே. மாயாதுன்னே, இலங்கை துறைமுக அதிகார சபையின் தலைவர் லுதினன் ஜெனரால் தயா ரத்னாயக்க, முகாமைத்துவ பணிப்பாளர் அத்துல ஹேவாவித்தாரன, கொழும்பு டொக்யார்ட் தனியார் நிறுவணத்தின் தலைவர் எச். டனகா, அதன் பிரதான பணிப்பாளர் டி.வி.அபேசிங்க ஆகியோர் கலந்துக்கொண்டார்கள்.