ஐக்கிய தேசிய கட்சிக்கு வாக்களித்து தேயிலை தோட்டங்களை அழிப்போமா? அல்லது கோட்டாவை ஆதரித்து அபிவிருத்தின் பங்குதாரர் ஆவோமா?


மக்களே தீர்மானிக்க வேண்டும்.. இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் பொதுச் செயலாளர் சுப்பையா சதாசிவம் தெரிவிப்பு.

ஹட்டன் கே.சுந்தரலிங்கம் -னவசமாகவும் அரச பெருந்தோட்டங்களாகவும் காணப்பட்ட தோட்டங்களை 21 கம்பனிகளுக்கு பிரித்து கொடுத்து எமது மக்களை கொத்தடிமையாக்கியது, ஐக்கிய தேசிய கட்சி, அன்று தோட்டங்களை பிரித்து கொடுக்கும் போது பிரதமராக இருந்தவர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் தான்.தோட்டங்களை பிரித்து கொடுக்கும் போது சுமார் 3 லட்சத்திற்கும் அதிகமான ஹெக்டேயார் தேயிலை தோட்டங்கள் காணப்பட்டன. இன்று அந்த தேயிலை தோட்டங்கள் ஒரு லட்சத்து 50 ஆயிரமாக மாறியுள்ளன. ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் தேயிலை தோட்டங்கள் காடுகளாக மாறியுள்ளன.இந்த தேயிலை தோட்டங்களை திட்டமிட்டு காடாக்கி, எமது மக்களை நிர்கதி நிலைக்கு தள்ளிவிட்டவர்கள.; இந்த ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சி தான். ஆகவே ஐக்கிய தேசிய கட்சிக்கு வாக்களித்து தேயிலை தோட்டங்களை அழித்து எமது மக்களை அழித்து விடுவோமா? அல்லது கோட்டபாய அவர்களை ஆதரித்து அபிவிருத்தியின் பங்குதாரர்களாக மாறுவோமா? என்பதனை மக்களே தீர்மானிக்க வேண்டும். என இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் பொதுச் செயலாளர் சுப்பையா சதாசிவம் தெரிவித்தார்.
கோட்டபாய அவர்களை ஏன் தோட்ட மக்கள் வெற்றிப்பெறச் செய்ய வேண்டும் என்பதனை தோட்ட தலைவர்களை தெளிவு படுத்தும் கூட்டம் ஒன்று. இன்று. (03) இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் ஹட்டன், அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்.....
மஹிந்த ராஜபக்ஸ அவர்களை நாம் ஆதரிக்கா விட்டாலும் கூட கம்பனிகள் எதிர்க்கும் போது அவர் தோட்டங்களுக்கு பல்வேறு வழிகளில்; அபிவிருத்திகளை மேற்கொண்டார்.தோட்ட பாதைகளை புனரமைத்தார்,பாடசாலைகளுக்கு கட்டடங்களை பெற்றுக்கொடுத்தார்.விஞ்ஞான கூடங்களை அமைத்துக்கொடுத்தார் தோட்ட இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்புக்களை பெற்றுக்கொடுத்தார்.
மாறாக ஐக்கிய தேசிய கட்சி என்ன செய்தது? சிந்தித்து பாருங்கள்,ஆயிரம் ருபா பெற்றத்தருவதாக வாக்குறுதி அளித்தார்கள் பெற்றுக்கொடுத்தார்களா? அதனை தொடர்ந்து அமைச்சரவையில் 50 ரூபா பெற்றுத்தர முடிவு செய்தார்கள். பெற்றுக்கொடுத்தார்களா?தீபாவளி முற்பணம் 5000 ரூபாவால் அதிகரிக்கப்பட்டதாக தெரிவித்தார்கள் கிடைத்ததா?அதற்கு பதிலாக எத்தனையோ தோட்டங்களில் உள்ள தேயிலை தொழிற்சாலைகளை மூடினார்கள்,முன்னர் தேயிலை தூள் பெட்டிகளில் தான் அடைப்பார்கள் ஆனால் இன்று அந்த பெட்டிகளுக்கு பதிலாக உறைகளை பயன்படுத்தப்படுகின்றன.,
அந்த தேயிலை பொதி செய்யும் உறைகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை ஒன்றை மூடிய தொழிற்சாலையில் ஆரம்பித்திருந்தால் கூட ஐம்பது பேருக்கு வேலை கிடைத்திருக்கும்.
இன்று ஜனாதிபதி வேட்பாளராக இருக்கும் சஜித் பிரேமதாச அவர்கள் நாடு முழுவதும் கிராமங்களை அமைத்து கொடுத்து வருகிறார். எந்த தோட்டத்திலாவது ஒரு கிராமத்தினை அமைத்து கொடுத்துள்ளாரா?
அமைச்சரவையில் 50 ரூபா தோட்டத்தொழிலாளிக்கு வழங்க முடிவு செய்யும் போது அதே அமைச்சரவையில் பெருந்தோட்டத்திற்கு பொறுப்பாக இருக்கும் அமைச்சரே அதனை கொடுக்க முடியாது. என மறுக்கிறார்.இந்நிலையில் எவ்வாறு இவர் 1500 ரூபா பெற்றுக்கொடுப்பார். எனவே பலர் பல கதைகளை சொல்லலாம்,நாலரை ஆண்டு காலப்பகுதியில் நாம் பல்வேறு துன்பங்களை அனுபவித்துள்ளோம்.பொருட்களின் விலைகள் வானளவு உயர்ந்துள்ளன, தோட்டத் தொழிலாளர்களுக்கு எவ்வித மானியமும் பெற்றுக்கொடுக்கவில்லை.சம்பள உயர் பெற்றுக்கொடுக்கவில்லை,சுகாதார துறை பாதிக்கப்பட்டுள்ளது இந்நிலையில் ஏன் மீண்டும் நாம் ஐக்கிய தேசிய கட்சிக்கு வாக்களிக்க வேண்டும்;.
கோட்டபாய ராஜபக்ஸ அவர்கள் நகர அபிவிருத்தி செயலாளராக இருந்து நகரங்களை அபிவிருத்தி செய்து வெற்றி கண்டவர். ஆகவே அவர் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளம் பெற்றுத்தருவதற்கான வழிகளை நான் ஏற்படுத்துவேன் தெரிவித்துள்ளதுடன்,தோட்ட இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்புக்களையும் பெற்றுத்தர உறுதியளித்துள்ளார்.அத்தோடு தேயிலை ,தென்னை,விவசாயம் ஆகிய துறைகள் பாதுகாப்பது தொடர்பாக அவருடைய தேர்தல் விஞ்ஞாபனத்திலேயே குறிப்பிட்டுள்ளார்,ஆகவே அவருக்கு வாக்களித்து எதிர்க்காலத்தில் எமது அபிவிருத்தியின் பங்கு தாரராகவோம் என நான் அனைவரிடமும் கேட்டுக்கொள்கிறேன் அவர் மேலும் தெரிவித்தார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -