முடக்கப்பட்டுள்ள அபிவிருத்திப் பணிகளை கிழக்கில் மீண்டும் துரிதமாக ஆரம்பிக்குக!


கிழக்கு முன்னாள் முதல்வர் நஸிர் அஹமட் கோரிக்கை
பிவிருத்தியூடாக இனநல்லிணக்கம் என்ற நோக்கில் ஜனாதிபதி கோத்தாபய ராஸபக்ஷ தமது பணிகளை முன்னெடுக்கவுள்ளதாகத் தெரிவிக்கும் நிலையில் கிழக்கு மாகாணத்தில் கடந்த காலங்களில் முடக்கப்பட்டிருந்த அபிவிருத்தி பணிகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நஸிர் அஹமட் கோரிக்கை விடுக் கின்றார்.

இது குறித்த அவரது செய்திகுறிப்பில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது:-

அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவிடம் ஒப்படைத்தமை தவறானது என சுட்டிக்காட்டும் ஜனாதிபதி, கிழக்கில் திருகோணமலை துறைமுகத்தை வெளிநாட்டு சக்திகளில் கரங்களுக்கு சென்றுவிடாது அபிவிருத்தி செய்ய முன்வரவேண்டும் அத்தோடு மட்டக்களப்பு விமான நிலையத்தையும் துரிதகதியில் சர்வதேச தரத் துக்கு அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்

குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் பெரும்தெருக்கள் மற்றும் உள்ளக வீதிகளின் புணரமைப்பு பணிகள் தேக்கம் கண்டுள்ளன. அவற்றை துரிதமாக முன்னெடுக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.

புதிய அமைச்சரவை பொறுப்பேற்ற பின்னர் 'மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற் றுவதற்கே பதவிப் பெறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன இவை சிறப்புரிமைகள் அல்ல எனத் தெரிவிக்கும் ஜனாதிபதியின் கருத்துக்கேற்ப புதிய அமைச்சர்கள் கடந்த காலங்களில் தேக்கம் கண்டுள்ள பணிகளை கண்டறிந்து அவற்றை பூர்த்தி செய்வ தற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

கிழக்கில் தற்போது வேலையற்றோர் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இங்கு புதிய தொழில்துறைகள் அறிமுகம் செய்யப்பாடமை மற்றும் அரச தொழில் துறை யிலுள்ள வெற்றிடங்கள் உரியமுறையில் நிரப்பப்படாமை போன்ற காரணங்களால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே இதற்கான உரிய தீர்வுகளைப் பெற்றுக்கொள் புதிய ஜனாதிபதியும் அரசாங் கமும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கேட்டுக்கொள்ள விரும்புகிறேன் - என்று ள்ளது.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -