இவ்வாறு சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதில் அவர் மேலும் கூறியுள்ளதாவது:
நாட்டில் மீண்டும் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்காகவும் சிறந்த அபிவிருத்திகளை முன்னெடுப்பதற்காகவும் சஜித் பிரேமதாசா அவர்களை ஜனாதிபதியாக்கும் நோக்கில் எமது மக்கள் வாக்களித்தனர்.
தூரஸ்திஷ்டவசமாக அவரால் வெற்றி பெற முடியவில்லை. இருந்தாலும், எமது மக்கள் அவரை வெற்றி பெற வைக்க வேண்டும் என்ற நோக்கில் கூடுதல் பங்களிப்பை வழங்கினர்.அவருக்கு வாக்களித்தது மாத்திரமன்றி தேர்தல் காலத்தில் களத்தில் இறங்கியும் செயற்பட்டனர்.
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வேண்டுகோளை ஏற்று எமது மக்கள் சஜித்துக்கு வாக்களித்தனர்.அந்த மக்கள் அனைவருக்கும் நான் எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
இனிவரும் காலங்களிலும் மக்கள் தொடர்ந்தும் எம்முடன் இவ்வாறு இணைந்திருக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.
அதேவேளை,புதிதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஸவுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.ஜனநாயகத்தை மதித்து நீதியான ஆட்சியை அவர் நடத்த வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.-என்றார்.