திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இரண்டு கட்சிகளின் ஆதரவாளர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் இருவர் கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் இன்று(18) மாலை கந்தளாய் பேராறு பகுதியில் இடம்பெற்றுள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ஜனாதிபதி கோட்டாபயவின் கட்சி ஆதரவாளர்களுக்கும்,சஜித் பிரேமதாஸவின் கட்சி ஆதரவாளர்களுக்குமிடையே ஏற்பட்ட மோதலின் போதே இருவர் பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கந்தளாய் பேராறு பகுதியைச் சேர்ந்த ஏ.எம்.நிசாம் வயது(27),மற்றும் சப்ராஸ் முகமட் வயது(29) ஆகிய இருவருமே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும்,
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.