இடைக்கால பிரதமராக பதவியேற்கிறார் மஹிந்த?


பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவி விலகவுள்ளதாக அறிவித்துள்ள நிலையில், மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக கொண்ட இடைக்கால அரசாங்கம் பதவியேற்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.
அதற்கமைய இந்த அரசாங்கம் இன்று (புதன்கிழமை) மாலை அல்லது நாளை காலை பதவியேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அத்துடன் தினேஷ் குணவர்த்தன, விமல் வீரவன்ச, கம்மன்பில, மஹிந்த அமரவீர, தயாசிறி ஜயசேகர, நிமால் சிறிபாலடி சில்வா உள்ளிட்டவர்கள் அமைச்சு பதவியை ஏற்கவுள்ளனரென்றும் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த சில தினங்களாக நீடித்த இழுபறியின் பின்னர், பிரதமர் பதவியை துறக்க ரணில் விக்கிரமசிங்க நேற்று முடிவு செய்தார். நேற்று மாலை ஜனாதிபதி கோட்டாபயவை சந்தித்து தனது முடிவை தெரிவித்தார்.

ஐ.தே.கவின் இணக்கப்பாட்டுடன் நாடாளுமன்றத்தை உடனடியாக கலைப்பது, அரசாங்கத்தை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிடம் ஒப்படைப்பது, மார்ச் வரை தற்போதைய அரசாங்கமே பதவியிலிருக்கும் என்ற மூன்று விடயங்களையும் முன்னிலைப்படுத்தி இரண்டு தரப்பும் ஆலோசித்து வந்தது.
இருந்தபோதும் தற்போதைய அரசாங்கம் தொடர்வதை கோட்டாபய ராஜபக்ஷவும் சஜித் தரப்பும் விரும்பவில்லை.

மக்களின் ஆணையை மதித்து பதவிவிலக வேண்டுமென இரு தரப்பும் கருதின. நாடாளுமன்றத்தை கலைப்பதை ஐ.தே.க. மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் விரும்பவில்லை. தமது நாடாளுமன்ற ஓய்வூதியம் கிடைக்காமல் போய்விடுமென அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் இறுதி வழியான இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதென இரு தரப்பும் இணக்கம் கண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -