இது குறித்த அவரது செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது:-
சமகாலத்தில் சிறுபான்மை மக்கள் மத்தியில் ஏற்பட்டு வந்த புரிந்துணர்வும் ஐக்கி யமும் பெரும்பான்மை மக்கள் மத்தியில் நல்லிணத்தை ஏற்படுத்துவதற்கான வழி வகைகளைச் செய்து வந்தன. எனினும் சமீபத்தில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர் தலுக்கு பின்னர் இதில் துருவமயம் ஏற்பட்டுள்ள ஒரு நிலைமையை நாம் பார்க்கி றோம்.
இந்த நிலைமையானது பரப்புரைகளால் ஏற்பட்ட ஒன்றாகவே கருதவேண்டியுள்ளது. எனினும் இந்த நிலைமையானது தொடர்ந்து நீடித்துச் செல்வது பல்வேறு விபரீதங் கள் ஏற்பட வழிவகுக்கும். ஆக இது விடயத்தில் நாம் மிக அவதானமாகச் செயற் படவேண்டும். சின்னசின்ன விடயங்கள் ஊதிப் பெருப்பிக்கப்பட்டு அவை ஒற்றுமை உணர்வை நிலை குலையச் செய்யும் நிலைமைகளை ஏற்படுத்தலாம். இத்தகைய நிலைமைகள் ஏற்படாத வண்ணம் சிறுபான்மை மக்களின் அரசியல் தலைமைகள் தமது கருத்தோட்டங்களை செயல்முறைகளை முன்னெடுக்கத் தலைப்படவேண்டும்.
கட்சி அரசியல் என்பது காலகாலமாக தத்தமது வெற்றிவாய்ப்புகளை கருத்தில் கொண்டே செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இதன் காரணமாக இன நல்லிணக்கம் சகோதரத்துவம் ஐக்கியம் சாந்தி, சமாதானம் என்பன அவ்வப்போது கேள்விக்குரிய னவாக ஆக்கப்பட்டு சமூகங்களின் மத்தியில் நம்பிக்கையின்மையை ஏற்படுத்து பவையாக உருவாக்கம் பெறுகின்றன.
குறிப்பாக சமூகம் சார்ந்த அரசியலை வழிநடத்துவோர்கூட தமது கட்சி அரசியலை பிரதானப்படுத்துவதன் காரணத்தால் சமூகங்களுக்கிடையில் பிரிவுகள் ஏற்படக்கூடிய நிலைமைகள உருவாகுவதையும் நாம் பார்க்கின்றோம்.
எனினும் இதுவிடயத்தில் பெரும் மாற்றமாக சமகாலத்தில் முஸ்லிம் அரசியல் தலைமைகள் மேற்கொண்ட ஒற்றுமைப்பட்ட நடவடிக்கைகள் நம்பிக்கையை தோற்றி வித்திருக்கின்றன. இவை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லப்பட்டு புதிய அரசியல் கலாசாரம் தோற்றிவிக்கப்படவேண்டும் என்பதை நான் வலியுறுத்த விரும்புகிறேன்.
எதிர்காலத்தில சகல சமூகங்களும் இணைந்து செயற்படும் நிலைமைகள் உருவா கும் வண்ணம் எமது அரசியல் வழிநடத்தல்களை நாம் இணைந்து முன்னெடுக்க வேண்டும் - என்றுள்ளது.
