அகில இலங்கை மக்கள் காங்கிரஸினால் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள்



நூருல் ஹுதா உமர்-
கில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஏற்பாட்டில், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேச மக்களுக்கு நிவாரண உதவிகள் (17) வழங்கி வைக்கப்பட்டன. கண்டி, கெலியோயா, கல்கமுவ, எல்பிட்டிய விகாரை, பாயின்கம உள்ளிட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன், கட்சியின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான அஷ்ரப் தாஹிர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் என்.டி.எம். தாஹிர் உள்ளிட்டோரின் நேரடி கண்காணிப்பின் கீழ், கட்சியின் முக்கியஸ்தர்கள் ஆதரவாளர்கள் பலரின் பங்குபற்றுதலுடன் தேவையுடையோருக்கான நிவாரணப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதில் முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கண்டி மாவட்ட அமைப்பாளர் ஹம்ஜத், உள்ளூராட்சி மன்றங்களின் முன்னாள் இந்நாள் உறுப்பினர்கள், பிரதேச முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :