தமிழர்களை அரவணைத்துச்செல்லவேண்டிய தார்மீககடமை ஜனாதிபதிக்குண்டு!
வாழ்த்துச்செய்தியில் காரைதீவு பிரதேசசபைத்தவிசாளர் ஜெயசிறில் கருத்து.
காரைதீவு நிருபர் சகா-புதிய ஜனாதிபதியாக பதவியேற்றிருக்கும் கோட்டபாய ராஜபக்ச அனைத்து இனங்களுக்குமான தேசியத்தலைவராவார்.அவரது கன்னிஉரை உண்மையில் இதயசுத்தியுடன் இருக்குமானால் அது அர்த்தப்பட தமிழ்மக்களையும் அணைத்துச்செல்லவேண்டியது தார்மீக கடமையாகும்.
இவ்வாறு புதிய ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவிற்கு வாழத்துச்செய்தியனுப்பிய காரைதீவு பிரதேசசபைத் தவிசாளர் கே.ஜெயசிறில் குறிப்பிட்டுள்ளார்.
அச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
வடக்கு கிழக்கு மக்கள்இறுதியுத்தத்தில் தங்களுக்கு ஏற்படுத்தப்பட்ட அவப்பெயரினால் நம்பிக்கை இழந்து ஆனால் இனரீதியில் அல்லாமல் இனப்பிரச்சினைக்குதீர்வு வேண்டும் என்ற ரீதியில் வாக்களித்துள்ளனர்.
அவர்களது நோக்கத்தை நீங்கள் நன்கு உணர்ந்தால் தங்கள் கன்னியுரையில் கூறியவண்ணம் அனைத்து மக்களையும் ஒரேதாய் வயிற்றுப்பிள்ளைப்போல நேசித்து நாட்டைக்கட்டியெழுப்பமுடியும்.
தங்களுக்காக வேலைசெய்தோம் என்று கூறுமளவிற்கு வடக்குகிழக்கில் ஓரிரு தலைவர்களைத்தவிர ஏனையவர்கள் இல்லையென்பதையும் நன்கு அறிவீர்கள். நீங்கள் கூறியதுபோன்று வாக்களித்த வாக்களியாத அனைவருக்கும் நீங்கள் தான் ஜனாதிபதி. எனவே புதியதொரு அரசியல்கலாசாரத்தை ஏற்படுத்தி நாட்டைக்கட்டியெழுப்ப சகல ஒத்துழைப்புகளையும் வழங்க தயாராகவுள்ளோம்.