நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நோர்வூட் பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் ஹட்டன் நோர்வூட் பிரதான வீதியில் இன்று (25) பகல் 3.15 மணிளவில் முச்சக்கரவண்டி ஒன்று தனியார் பஸ்ஸூடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் முச்சக்கர வண்டியில் பயணஞ் செய்த மூன்று பேர் கடும் காயங்களுக்குள்ளாகி டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஹட்டனிலிருந்து மஸ்கெலியா நோக்கி சென்;று கொண்டிருந்த தனியார் பஸ் ஒன்றும் நோர்வூட் பகுதியிலிருந்து ஹட்டன் பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்த முச்சக்கர வண்டியுமே விபத்துக்குள்ளாகியுள்ளனர்.
இந்த விபத்தின் போது முச்சக்கரவண்டியில் நான்கு பேர் பயணஞ் செய்ததாகவும் இதில் மூன்று பேர் கடும் காயங்களுக்கு உள்ளாகியிருப்பதாகவும் இவர்களில் சிறுவர் ஒருவர் அடங்குவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தார்.
குறித்த விபத்து முச்சக்கரவண்டியின் சாரதியின் கவயீனம் காரணமாக ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணையின் மூலம் தெரிய வந்துள்ளன.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நோர்வூட்பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.