இலங்கை அரசியல் சுதந்திரத்திற்கு முன்னும் பின்னும் இலங்கை முஸ்லிம்கள் நாட்டின் அரசுக்கு விசுவாசமுள்ளவர்களாகவும் பாதுகாவலர்களாகவும் இருந்து சுதந்திரத்திற்கு முன்னும் பின்னும் பௌத்த மன்னர்கள் காலமுதல் வெள்ளையர்களின் ஆட்சி காலமுதல் அமைச்சரவையில் முஸ்லிம்களுக்கு அந்தஸ்து கொடுக்கப்பட்டு வந்துள்ள நிலையில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலின் பின்னரான இன்றைய காபந்து அரசில் அமைச்சரவையில் ஒரு முஸ்லிம்கள் கூட உள்வாங்க படாத நிலை காரணம் என்ன என்பது பற்றி கேள்வி எழுகிறது
சுதந்திரத்திற்கு முன்பு
1521 காலப்பகுதிக்கு பிறகு விஜயபாகு மன்னனின் படுகொலைக்கு பின்னால் கோட்டை இராஜ்யத்தின் மாயாதுன்னா மன்னன் ஆட்சிக்கு காலத்தில் முஸ்லிம்கள் செல்வ செழிப்புள்ளவர்களாகவே இருந்தனர் இதன் மீது காழ்ப்புணர்ச்சி கொண்ட பெருமானையினர் மன்னனிடம் முஸ்லிம்களை நாட்டை விட்டு விரட்டி அடிக்க வேண்டும் கோசத்தை முன்வைத்தனர் அதை செவிமடுக்காத மன்னன் போத்துக்கேயர் படை எடுத்து வந்தபோது முஸ்லிம்களே எம்மை காவலர்களாக பாதுகாத்தனர் என்பதை அம்மக்களுக்கு உணர்த்தினான்
மாயாதுன்ன அரசனின் அமைச்சக்கரவையில் மூன்று முஸ்லிம்களுக்கு அந்தஸ்து கொடுக்கப்பட்டது அதிலும் மன்னனின் பிரதான ஆலோசகராக ஒரு முஸ்லிம் ஒருவரையே மன்னன் நியமித்திருந்தான்
டொனமூர் ஆட்சியில் 1931ல் பிரித்தானிய ஆங்கில ஆட்சியினரால் அமைக்கப்பட்ட மந்திரி சபையில் ஏழு அமைச்சுக்களை முஸ்லிம்களுக்கு வழங்கி கெளரவித்தனர் அதிலும் நாட்டின் பிரதான போக்குவரத்து அமைச்சு எம்.என்.மாக்கா மார்க்கர் கொடுக்கப்பட்டது
1956 ல் ஏன் சுதந்திரத்திற்கு முன்பும் நாட்டில் கலாநிதி பதியுதீன் முஹம்மது
1966 ல் எம்.எச்.முஹம்மத்
1981 ல் மார்க்க மரைக்கார் போன்றோர் அமைச்சரவையில் தொடர்ந்து அங்கம் வகித்தனர்
1979 ல் ஏப்ரல் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்திற்கு எதிராக பெரும்பான்மை கட்சிகளில் ஒன்றான மக்கள் விடுதலை முன்னணியால் நடாத்தப்பட்ட ஆட்சி கவிழ்ப்பிற்கு எதிராக நடந்த கலவரத்தில் முஸ்லிம்களின் பொருளாதாரமே திட்டமிட்டு இலக்கு வைத்து அழித்தனர்
1978 யாப்பில் விகிதாசாரமுறை அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னர் இலங்கை முஸ்லிம்கள் அரசியலில் தவிர்க்க முடியாத சமூகமாக மாற்றம் பெற்றது சிறுபான்மையினர் இல்லாமல் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை நிரூபிக்க முடியாத நிலைக்கு பெரும்பான்மை அரசியல் தள்ளப்பட்டது
1989 காலப்பகுதிவரை முஸ்லிம் கட்சிகளை அரச கட்சியாக ஏற்றுக்கொள்ள முடியாத அரசாகவே இருந்து வந்தது
மறைந்த தலைவர் எம்.எச்.எம்.அஸ்ரப் அவர்கள் 1989 தேர்தலின் பின்னரான காலப்பகுதியில் இலங்கை முஸ்லிம்கள் அரசியலில் ஒரு தவிர்க்க்க முடியாத சமூகமாக மாற்றம் பெறச்செய்தார்
1994 பொது தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் ஏப்பமிட்டுக்கொண்டிருந்த நிலையில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையார் தலைமையிலான அரசாங்கத்திற்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமை மர்ஹூம் அஸ்ரப் அவர்களின் கட்சி ஆதரவளித்து ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தை கவிழ்த்து அதனூடாக முஸ்லிம் சமூகத்தின் பலம் அரசியல் சமூகம் தலை நிமிர்ந்து முழு முஸ்லிம் சமூகத்தையும் ஒரு கெளரவமான சமூகமாக தேசியம் மட்டுமல்ல சர்வதேசத்திற்கும் காட்டினார்
முஸ்லிம் இந்த நாட்டின் இனவாதியா ..?
நாட்டின் சுதந்திரத்திற்க்காக பெரும்பான்மை சிங்களவர்களோடு சேர்ந்து நாட்டில் சுதந்திரம் மலர பாடுபட்டவர்கள் டி.பி.ஜாயா மற்றும் அறிஞர் சித்தி லெப்பை ஆகியோரின் பங்களிப்பு அளப்பெரியது என்பதை யாரும் இலகுவில் மறந்துவிட முடியாது
ஜோன் கொத்தலாவல ஆட்சிக்காலத்தில் தேசப்பிதா என்று சொல்லப்படும் டீ.எஸ்.சேனநாயகே,டட்லி சேனநாயகே போன்ற தேசத்தை காத்தவர்கள் என்று பெரும்பான்மை மக்களால் புகழப்பட்ட அரசியல் தலைவர்கள் எஸ்.டபுள்,யூ.ஆர்.டி.பண்டாரநாயகே அவர்களின் தனி சிங்கள சட்டத்தால் தோற்று வாழ்த்தப்பட்ட மக்களால் பின்னர் இனவாதத்தின் மேலாதிக்கத்தால் ஒதுக்கப்பட்டனர்
ஜோன் கொத்தலாவல ஆட்சியில் இருந்து பிரிந்து எஸ்.டபுள்,யூ.ஆர்.டி.பண்டாரநாயகே 1956ல் இலங்கை சுதந்திர கட்சி என்ற ஒன்றை உருவாக்கி வெற்றியும் கண்டார் அதன் பின்னர்
1956 ல் பண்டா செல்வா ஒப்பந்தம்,அதே ஆண்டில் ஸ்ரீமா சாஸ்திரி ஒப்பந்தம் இரண்டிலும் முஸ்லிம்கள் புறக்கணிப்பட்டனர்
1957 ல் எஸ்.டபுள்,யூ.ஆர்.டி.பண்டாரநாயகே அவர்களால் தனி சிங்க மசோதா கொண்டுவரப்பட்டது ,1959 ல் சிங்க ஸ்ரீ மசோதா கொண்டுவரப்பட்டு நாட்டில் சிங்கள மொழி அரச மொழியாகவும் அரச நிர்வாகங்களில் சிங்கள மொழி மட்டுமே பௌத்த நாடு என்பதால் பயன்படுத்த முடியும் என்று முழு இனவாதத்தியும் கக்கினார் எஸ்.டபுள்,யூ.ஆர்.டி.பண்டாரநாயகே அவர்கள் இதிலும் தமிழ் முஸ்லிம் மக்கள் புறக்கணிக்கப்பட்டனர்
1915 ல் பிரித்தானியர் ஆட்சிகாலப்பகுதியில் முஸ்லிம்கள் செல்வ செழிப்புள்ளவர்களாக இருந்த நிலையில் அன்று இருந்த பெரும்பாண்மை தலைவர் அவர்களின் ஆதரவாளர்கள் முஸ்லிம்களின் பொருளாதாரத்தை தீயிட்டும் சூறையாடியும் அழித்தனர் இதனை அறிந்த பிரித்தானிய படை அரச தலைவர்களான டி.எஸ்.சேனநாயகே,டி.பி.ஜயதிலக்க,சேர் பேணார்ட் சொய்சா,அநாகரிக தர்மபால,எட்மன் ஹேவா விதாரண,வணசிங்க ஹரிச்சந்திர,எஸ்.ஏ.விக்காரமசிங்க மற்றும் ஏ.ஈ.குணரத்ன போன்றோர் பிரித்தானிய படைகளால் கைதுசெய்ப்பட்டு அடைக்கப்பட்டனர்
பின்னர் சேர் பொன்னம்பலம் ராமநாதன்,பொன்னம்பலம் அருணாச்சலம் போன்றோர் அன்றைய உலக மகா யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் எந்த மனுவையும் பிரித்தானியாவுக்கு கொண்டு செல்ல முடியாது என்ற நிலையில் அவர்களுடைய சப்பாத்திற்குள் மனுவை மறைத்து கொண்டு சென்று பிரித்தானிய அரசியிடம் கையெழுத்தை பெற்று இலங்கை வந்து 1919 குறித்த தலைவர்கள் விடுவிக்கப்பட்டனர் ,அன்றும் முஸ்லிகளுக்கு எதிராக நடந்த சம்பவத்தில் ஒன்றே
1989ல் வட மாகாணத்தில் இருந்து முஸ்லிம் சமூகம் புலிகளால் வெளியேற்றப்பட்டபோது தமிழ் முஸ்லிம் மக்களிடையே அன்றே புரிந்துணர்வு சீர் குழைந்தது
காத்தான்குடி பள்ளிவாசலில் 103 முஸ்லிம்கள் புலிகளால் படுகொலை 1990 ஆகஸ்ட் 3 ம் திகதி செய்யப்பட்ட போது புரிந்துணர்வு சீர் குழைப்பட்டது
இதற்கு காரணமானவர்கள் யார், யார் புலிகளை தோற்றுவிக்க காரணம் தமிழ் இளைஞர்கள் வீதிகளில் டயர் போடப்பட்டு எரிக்கப்பட்டபோது அதன் விளைவு புலிகள் இயக்கம் எனவே தமிழ் முஸ்லிம் சமூகங்களை பிரித்தவர்கள் யார் என்பதை நீங்கள் புரிந்துகொண்டிருப்பீர்கள்
முஸ்லிம்கள் எப்போதும் நாட்டையும் நாட்டு மக்களையும் பிற இனத்தவரையும் ஆதரிக்கின்ற சமூகமாகவே இருந்து வந்தது இதனாலதான் கடந்த ஏப்ரல் 21 சம்பவம் முஸ்லிகளை ஒரு இனவாதமாக சித்தரிக்க நீண்ட நாற்கள் போடப்பட்ட திட்டங்களில் ஒன்று இன்று முழு முஸ்லிம் சமூகமும் இனவாதிகளாக காட்டப்பட்டு கடந்த மன்னராட்சி முதல் இற்றைவரைக்கும் முஸ்லிகள் அரசோடு இருந்த நம்பிக்கை நல்லிணக்கம் தலை நிமிந்த சமூகம் இன்று ஒரு சாக்கினுள் இழுத்து கட்டப்பட்ட சமூகமாக பெரும்பான்மை மக்கள் பார்க்கின்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ள துர்பாக்கிய நிலை
இன்று நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலின் பின்னர் முஸ்லிம்கள் அமைச்சரவையில் உள்வாங்கப்படாது குறித்து மீண்டும் இலங்கை 71 வருட காலத்தை பின்னோக்கி நகர்ந்துள்ளது போல் அரசியல் ரீதியாக முஸ்லிம் சமூகத்தை ஒதுக்கும் நிலைப்பாட்டில் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலையும் வெற்றிபெறும் நோக்கில் மேற்கொள்ளப்படும் அதே விளம்பரம் தொடரத்தான் போகுது என்பதை சுட்டிக்காட்டியாகவேண்டும்
எனவே முகநூல் நண்பர்களே இளைஞர்களே எமது சமூகத்தின் வரலாற்றை இலங்கை திருநாட்டின் சுதந்திரத்திற்கு முன்னும் பின்னும் மீட்டிப்பார்க்கவேண்டிய காலத்தின் தேவை எமக்குள்ளது குறித்த முஸ்லிம்களுக்கு எதிரான நிகழ்ச்சி நிரல் அன்று தொட்டு வந்ததா இல்லை அண்மையில் வந்ததா என்பது பற்றி நாம் சற்று பார்த்தல் வரலாற்று சுவடிகளில் இருந்து தெளிவு பெறலாம்