திருகோணமலையில் கடைகள்,வீடுகள் போன்றவற்றில் திருடியமை போன்ற பல குற்றச்செயல்களுடன் தொடர்புடைய நபயொருவருக்கு 30 மாதம் கட்டாய சிறைதண்டனையும்,18,500 தண்டப்பணம் அத்தொகையை செலுத்தத் தவறின் மேலும் 15 மாதம் சிறைதண்டனை விதித்து திருகோணமலை நீதிமன்ற நீதிவான் எம்.எச்.எம்.ஹம்ஸா இன்று(17) உத்தரவிட்டார்.
சுமேதகம,ஐந்தாம் கட்டை,திருகோணமலை பகுதியைச் சேர்ந்த 51 வயதுடைய ஒருவருக்கே இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் கடைகள் உடைத்தமை,வீடுகளுக்குள் புகுந்து திருடியமை,திருட்டு இரும்புகள் விற்பனை செய்தமை போன்ற திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய ஒருவருக்கே இன்றைய தினம் திருகோணமலை நீதிமன்ற நீதிவான் சிறைதண்டனை விதித்து உத்தரவிட்டார்.
குறித்த நபருக்கு ஹேரொயின் போதைப்பொருளுடன் தொடர்புடைய வழக்குகள் நீதிமன்றில் நடைபெற்றும் வருகின்றது.