சுகாதார சுதேச வைத்திய இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம்
சனாதிபதி தேர்தலில் ஹிஸ்புல்லா களமிறங்கியிருப்பது தற்கொலைக்கு சமனானது என சுகாதார சுதேச வைத்திய இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் அவர்கள் தெரிவித்தார்.
சுயதொழில் கைத்தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் நோக்கோடு Global fashion industries வருடார்ந்த பயிற்சி நெறியை பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று சனிக்கிழமை (19) காலை 11மணியளவில் Global fashion industries நிறைவேற்று பணிப்பாளர் லறிப் வாஹிட் தலைமையில் இடம்பெற்றது.
இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக சுகாதார சுதேச வைத்திய இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் கௌரவ அதிதிகளாக நிந்தவூர் பிரதேச சபையின் உறுப்பினரும் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எல்.றியாஸ் ஆதம் , கல்முனை பிராந்திய காணி பதிவு ஆணையாளரும் மேலதிக மாவட்ட பதிவாளருமாகிய எம்.ஏ.ஜமால் முகம்மட் , இலங்கை இறைவரி திணைக்களத்தின் உதவி ஆணையாளர் எம்.எம் முசம்மில் அவர்களும் .பயிற்சி நெறியை பூர்த்தி செய்த மாணவர்கள், பெற்றோர்களும் கலந்துகொண்டனர் .
நிகழ்வுகளின் பின்னர் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையில்,
கேள்வி: சனாதிபதி தேர்தலில் முஸ்லிம்கள் சார்பாக முன்னாள் ஆளுநர் எம்.எல் ஏ.எம் . ஹிஸ்புல்லா சனாதிபதி வேட்பாளராக களமிறங்கிய சூழ்நிலையில் முஸ்லிம் மக்களை பிரதிநித்துவப்படுத்தும் கட்சிகள் ஏன் நாட்டின் பிரதான கட்சிகளை ஆதரிக்க காரணம்?
பதில்: சனாதிபதித் தேர்தலில் வேட்பாளர்கள் இருவர்தான் சஜித் பிரேமதாச அல்லது கோட்டாபய ராஜபக்ச இவ் இருவரையும் தவிர எனது நண்பர் முன்னாள் கிழக்கு மாகாண சபை ஆளுநர் எம் எல் ஏ எம் ஹிஸ்புல்லா ஜனாதிபதி வேட்பாளராக களம் இறங்கி இருப்பது அவருடைய பல்கலைக்கழகம் சம்பந்தமாக இருக்கின்ற பிரச்சினைகளை ஒரு காலகட்டத்தில் தீர்த்துக் கொள்ள முடியுமென்ற யோசனையாக கூட இருக்கலாம்.
இது ஒரு தற்கொலை வேலைத்திட்டம் என்றுதான் நான் கருதுகிறேன். நானறிந்தவரை கோத்தபாய ராஜபக்ஷ அவர்களின் ஏஜென்டாக தான் ஹிஸ்புல்லா வேலை செய்கிறார் என்பதை நான் கூறிக்கொள்கிறேன் .
கேள்வி : சஜித் ஆதரிக்கும் நீங்கள் முஸ்லீம்கள் நலன் சார்ந்து எழுத்துமூல உத்தரவாதத்தை பெற்றிருக்கிறீர்களா?
முஸ்லிம்கள் மட்டுமல்ல சிறுபான்மை மக்களின் நலன் சார்ந்து பல கோரிக்கைகளை கடந்த கால ஆட்சியாளர்களுடன் செய்திருக்கின்றோம் ஆனால் அவற்றில் பலவற்றில் வெற்றி கொண்டிருக்கின்றோம் சில நடைபெறாமல் போயிருக்கின்றன.
ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச அவர்களுடனான சந்திப்பின் போதும் அவர் கூறும் வார்த்தைகளில் நம்பிக்கை ஏற்பட்டு இருக்கின்றது இந்த நம்பிக்கையின் அடிப்படையில் நாங்கள் செயற்படுகின்றோம்.
இதன்போது கல்முனை வடக்கு பிரதேச செயலகம் சாய்ந்தமருது பிரச்சினைகள் காணிப்பிரச்சினை போன்ற விடயங்களை இழுத்தடிப்பு செய்யாமல் குறிப்பிட்ட சில காலங்களுக்கு முடித்து தருவதாக சஜித் உத்தரவாதம் வழங்கியிருக்கிறார்.
கேள்வி : ஒருவேளை கோத்தபாய ராஜபக்ஷ சனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றால் நீங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் சிறுபான்மை மக்களின் நிலை என்ன?
எங்களைப் பொறுத்த அளவில் சனாதிபதித் தேர்தல் சிறுபான்மை மக்களுக்கு அவசியமற்றது. நாங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் காட்சி ஆட்சிக்கு வருமானால் நாங்கள் தொடர்ந்து முன்னெடுத்து வரும் வேலைத்திட்டங்களையும் மேற்கொள்ளவிருக்கும் அதற்காகவே நாங்கள் சனாதிபதித் தேர்தலுக்கு முகங்கொடுக்க வேண்டி இருக்கின்றது.
மேலும் எமது வாக்குவங்கி அதிகரிப்பதற்கும் வாக்குரிமை தக்கவைத்துக் கொள்வதற்கும் ஏதுவாக இருக்கும் என தெரிவித்தார்.