கட்சித் தலைமைகளுக்கு கட்டுப்பட்டு விசுவாசமாக, நம்பிக்கையுடன் பணி செய்தவர்தான் உதுமாலெப்பை !


-மு.கா. தலைவர் ரவூப் ஹக்கீம்-

சலீம் றமீஸ்-
முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சர் உதுமாலெப்பை கட்சி தலைமைகளுக்கு கட்டுப்பட்டு விசுவாசமாக பணியாற்றி வந்துள்ளார். முஸ்லிம் காங்கிரஸில் இணைந்துள்ள அவர் ஒருபோதும் 'சீரொ' ஆக மாட்டார். உதுமாலெப்பையை ஒரு 'ஹீரோ' ஆக்கி;க் காட்டுகின்றேன் என முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம்' சூளுரைத்தார்.
தேசிய காங்கிரஸிலிருந்து விலகிய அக்கட்சியின் இணை ஸ்தாபகரும் முன்னாள் தேசிய அமைப்பாளரும் முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சருமான எம்.எஸ்.உதுமாலெப்பை மற்றும் அவருடன் விலகிய கட்சி முக்கியஸ்தர்களும் முஸ்லிம் காங்கிரஸில் இணையும் நிகழ்ச்சி கொழும்பு தாறுஸ்ஸலாமில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், உதுமாலெப்பை எங்களுடன் இணைந்து கொண்டதனை அன்போடு வரவேற்கின்றோம். ஆரம்பத்திலிருந்தே முஸ்லிம் காங்கிரஸின் அமைப்பாளராக செயற்பட்டவர். உதுமாலெப்பை முஸ்லிம் காங்கிரஸில் சேர்ந்து கொள்ளவில்லை. மீள இணைந்துள்ளார் என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன். முஸ்லிம் காங்கிரஸின் வளர்ச்சிக்கும் உதுமாலெப்பை பணியாற்றுவார் என்பது எனது நம்பிக்கையாகும். கடந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலின் முடிவின் படி அட்டாளைச்சேனையில் முஸ்லிம் காங்கிரஸின் வளர்ச்சியில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதனை உதுமாலெப்பையின் மீள் இணைவூடாக சரி செய்ய வேண்டும் எனவும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேலும் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசீம், பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். நஸீர், கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட், மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம், அன்வர், சிப்லி பாறூக் தேசிய காங்கிரஸின் முன்னாள் கொள்கைப் பரப்புச் செயலாளர் சிரேஸ்ட சட்டத்தரணி எம்.எம்.பஹ்ஜி, பொத்துவில் பிரதேச அமைப்பாளர் ஏ.பதுர்கான், அட்டாளைச்சேனை பிரதேச சபை பிரதித் தவிசாளர் எம்.எஸ்.எம்.ஜஹ்பர், மூதுர் பிரதேச அமைப்பாளர் நவாஸ், இறக்காமம் பிரதேச அமைப்பாளர் எம்.எஸ்.எம்.பரீட் உட்பட முக்கியஸ்தர்கள், முஸ்லிம் காங்கிரஸ் பிரதேச சபை உறுப்பினர்கள் அட்டாளைச்சேனை மத்திய குழு முக்கியஸ்தர்கள் மற்றும் ஏனையோர்களும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -