சிலோன் மீடியா போரம் மற்றும் மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் ஏற்பாட்டில் "தகவல் உரிமைச் சட்டம்" தொடர்பான செயலமர்வு.


எஸ்.அஷ்ரப்கான்-
சிலோன் மீடியா போரம் மற்றும் மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்துடன் இணைந்து ஏற்பாடு செய்த "தகவல் உரிமைச் சட்டம்" தொடர்பான செயலமர்வு எதிர்வரும் சனிக்கிழமை (05) சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் இடம் பெறவுள்ளதாக சிலோன் மீடியா போரத்தின பொதுச் செயலாளர் ஏ.எஸ்.எம்.முஜாஹித் தெரிவித்தார்.

இச்செயலமர்வு பற்றி அவர் மேலும் தெரிவிக்கையில்,

இச்செயலமர்வில் அம்பாறை மாவட்டத்திலுள்ள தமிழ், முஸ்லிம் ஊடகவியலாளர்கள், சமூக ஊடக செயற்பட்டாளர்கள் மற்றும் சிவில் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்ள முடியும்.
செயலமர்வு எதிர்வரும் 05.10.2019ம் திகதி சனிக்கிழமை காலை 9.00 மணி முதல் மதியம் 12.00. மணி வரை சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் இடம் பெறவுள்ளதுடன், இதற்கென தலைநகரிலிருந்து வருகை தரும் சிறந்த வளவாளர்களால் தகவல் உரிமை சட்டம் தொடர்பாக விளக்கமளிக்கப்படவுள்ளது.
இதில் கலந்து கொள்ள ஆர்வமுள்ளவர்கள் சிலோன் மீடியா போரத்தின் பொதுச் செயலாளரின் 077 253 9298 வாட்ஸ்ஆப் ஊடாக உங்களது பெயர், விலாசம், கைபேசி இல, ஈமெயில் உள்ளிட்ட தகவல்களை அனுப்பி பதிவுகளை மேற்கொள்ள முடியும்.
இந்த செயலமர்வில் 50 பேர் மாத்திரமே பங்குபற்ற முடியும் என்பதனால் முதலில் பதிவுகளை மேற்கொள்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
இச்செயலமர்வில் கலந்து கொள்பவர்களுக்கு தகவல் உரிமைச் சட்டம் பற்றிய கைநூல் மற்றும் இதர தகவல்கள் அடங்கிய பிரசுரங்கள் என்பன வழங்கி வைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -