ஓட்டமாவடி தேசிய பாடசாலை கராத்தே வீரர்கள் தேசிய போட்டிக்கு தெரிவு.

எச்.எம்.எம்.பர்ஸான்-

லங்கை கராத்தே சம்மேளனம் கிழக்கு மாகாண ரீதியாக நடாத்திய கராத்தே போட்டியில் ஓட்டமாவடி தேசிய பாடசாலை மாணவர்கள் பங்குபற்றி தேசிய போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளதாக பாடசாலையின் அதிபர் எம்.ஏ.ஹலீம் இஸ்ஹாக் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

எமது பாடசாலையைச் சேர்ந்த பதினொரு மாணவர்கள் குறித்த போட்டியில் பங்குபற்றி 2 தங்கப் பதக்கம், 1 வெள்ளிப் பதக்கம், 7 வெண்கலப் பதக்கங்களை வென்று சாதனை படைத்து தேசிய போட்டிக்கு தெரிவாகியுள்ளனர்.

குறித்த போட்டியில் பங்குபற்றி தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்களுக்கும், மாணவர்களை பயிற்றுவித்த சுகாரி சொட்டக்கன் கராத்தே பயிற்றுவிப்பாளர் மௌலவி ஏ.ஆர்.நவாஸ் காஸிமி மற்றும் மாணவர்களை தயார்படுத்திய ஆசிரியர் எம்.எல். நஜீம் ஆகியோர்களுக்கு அதிபர் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -