முன்னாள் அமைச்சர் சேகு இஸ்ஸதீனை கலாநிதி ஹிஸ்புல்லாஹ் சந்தித்து பேச்சு

முன்னாள் அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தவிசாளருமான சேகு இஸ்ஸதீனை ‘ஜனாதிபதியை தீர்மானிக்கும் ஜனாதிபதி வேட்பாளர்’ கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நேற்று வெள்ளிக்கிழமை (18.10.2019) அக்கரைப்பற்றில் சந்தித்து கலந்துரையாடினார்.
இதன்போது, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் முக்கியமாக கலந்துரையாடப்பட்டதுடன், எதிர்கால அரசியல் நகர்வுகள், சமூக உரிமைகளை பாதுகாப்பது எவ்வாறு போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பில் இதன்போது பேச்சு நடத்தப்பட்டது.
கலாநிதி ஹிஸ்புல்லாஹ் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் ஆரம்பகால உறுப்பினராக இணைந்து செயற்பட்டபோது கட்சியின் அப்போதைய தவிசாளராக இருந்த சேகு இஸ்ஸதீன் அவருக்கு பூரண ஒத்துழைப்புக்களையும் - வழிகாட்டல்களையும் வழங்கியிருந்தமைக் குறிப்பிடத்தக்கது.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -