முதலாவதாக இந்த மூன்று விடயங்களையும் செயற்படுத்தும் நிறுவனங்களின் வியூகங்கள் முழுவதையும் அரசியலுக்கு அப்பால் செயற்படுத்த வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களிடம் ஒரே மேடையில் உறுதிமொழி பெறும் நிகழ்ச்சியான ‘மக்கள் மேடை’ நிகழ்ச்சி (சனிக்கிழமை) சுகததாச உள்ளக அரங்கில் இடம்பெற்றது. இந்த நிகழ்வை தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பெப்ரல் அமைப்பு நடத்தியது. இதில் கலந்துகொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும், விசேடமாக நீதியின் ஆதிக்கத்தை பாதுகாக்க முற்படும் போதும் சில இடையூறுகள் ஏற்படுவதாக குறிப்பிட்டுள்ள அவர், ஒருசிலர் இதனை பிழையான நோக்கத்துடன் கையாள்வதாக அறியமுடிகின்றது எனவும் குறிப்பிட்டார்.
அத்துடன், “எங்கள் மீது அழுத்தங்களையும் பிரயோகிக்கின்றார்கள். அதேபோன்று மனிதவுரிமைகளை பாதுகாத்தல் மற்றும் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் முயற்சிகளின் போதும் கடந்த பல தசாப்த காலமாக இந்த பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டியேற்பட்டது. எனவே, விசேடமாக இந்த துறைகளில் அரசியல் சார்பு இல்லாமல் சுயாதீனமாக செயற்படக் கூடிய வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டும்” எனவும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.